மஹத் ஐயா ரொம்ப சவுண்ட் விடுறாரு..! மஹத்தை கிண்டல் செய்த பிரபல நடிகை.!

0
933
Mahat

தமிழ் சினிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா.சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வரும் ஒரு பார்வையாளராக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறித்து ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் சமீபத்தில் நடிகர் மஹத், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் கோவப்பட்டு கத்தியதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார் நடிகை ஸ்ரீப்ரியா.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் மஹதிற்கும், நடிகர் பாலாஜிக்கு வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது நடிகர் மஹத் கோவத்தின் உச்சிக்கு சென்று நடிகர் பாலாஜியை கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி விட்டார். இதனை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீப்ரியா”மஹத் அய்யா ரொம்ப சவுண்ட் விடுறாரு” என்று பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண் போட்டியாளர்களின் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வருபவர் நடிகர் மஹத். முதலில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் கேட்ட பெயரை வாங்கிவந்த மஹத், சமீப காலமாக ஆண் போட்டியாளர்களிடமும் அதிகம் சண்டையிட்டு மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement