கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியலில் ஈடுபட வைத்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர். இந்த விடயம் தான் தற்போது தமிழகத்தையே உலுக்கி வருகிறது.
இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொலை செய்தாலும் சரி, கற்பழித்தாலயும் சரி அதிலிருந்து தப்பிக்க சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளது. எனவே, சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது, நாம் தான் இதற்கு எதாவது செய்ய வேண்டும். நான் கண்டிப்பாக சென்னை வந்ததும் பொள்ளாச்சி சம்பவத்திற்காக போராடுவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
நான் இது தொடர்பாக அனைத்து அரசியல்வாதிகளையும், காவலர்களையும் சந்தித்து கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுப்பேன். பாதிக்கபட்ட அனைத்து பெண்களையும் நான் நேரில் சந்தித்து என்ன நடந்தது என்று கேட்பேன். அவர்கள் வெளியில் வந்து சொன்னால் தான் அணைத்து உண்மைகளும் வெளியில் வரும்.
அப்போது தான் குற்றம் செய்தவர்கள் தண்டிக்படுவார்கள். இது போன்ற சம்பத்திற்கெல்லாம் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நாம் அனைவரும் பேசினால் தான் இதற்கெல்லாம் பதில் கிடைக்கும். அரசாங்கமும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.