ஹர்பஜன் அறைந்த விவகாரம்..!பிக் பாஸ் நிகழ்ச்சியில் உண்மையை சொன்ன ஸ்ரீசாந்த்..!

0
922
Srisaanth

தமிழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் ஒளிபரப்பாகியது. இதில் அதிகபட்சமாக இந்தியில் தான் 12 சீனை நெருங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 12 வது சீசன் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி துவங்கியது.

Srisaanth

- Advertisement -

கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐ பி எல் சூதாட்டத்தால் கிரிக்கெட் விளையாட தடை பெற்றார். மேலும், இவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் என்ற பெயரெடுத்தவர். அதே போல 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் முதல் சீசனிலேயே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்ததுதான்.

ஸ்ரீசாந்தோ களத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், இன்றும் பேசப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இதுகுறித்து சக போட்டியாளர்களுடன் பேசிய ஸ்ரீசாந்த், மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதும் ஹர்பஜனை சீண்டும்படியான வார்த்தைகளை நான் கூறியிருக்கக்கூடாது. அதுதான் அவரை கோபமடைய செய்தது. இருப்பினும் ஹர்பஜன் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அந்த சம்பவத்துக்கு பிறகு இருவரும் சந்தித்து எங்களுக்கு இடையேயான பிரச்னையை தீர்த்துக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.

Advertisement