பாலிவுட் படத்தில் நீச்சல் உடையில் நடித்துள்ள SS மியூசிக் லேகா (ஆனால், இந்த படம் வெளியாகவே இல்லை) வைரலாகும் புகைப்படம்.

0
470
lekha
- Advertisement -

சன் மியூசிக் சேனலில் விஜேக்கள் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானதிற்கு முன்பாகவே SS மியூசிக் சேனல் மூலம் பல விஜேக்கள் இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தனர். அதிலும் குறிப்பாக கிரேக், பூஜா, லேகா என்று பலர் அப்போதைய இளசுகளின் பேவரைட் தொகுப்பாளராக திகழ்ந்து வந்தனர். அந்த வகையில் லேகா வாஷிங்டன்னும் ஒருவர். ss மியூசிக்கில் இளசுகளின் நெஞ்சை கொள்ளைகொண்ட இவருக்கும் சினிமா வாய்ப்புகளும் குவிந்தது. தமிழ் தெலுங்கு என்று பலர் மொழிகளில் இவர் நடித்தார்.

-விளம்பரம்-

தமிழில் ஜெயம்கொண்டான், உன்னாலே உன்னாலே, கல்யாணம் சமையல் சாதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சயமானார் லேகா. தமிழ் மட்டுமல்லாது இவர் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். Peter gaya kaam se என்ற இந்தி படத்தில் நடித்தார் லேகா. அந்த படத்தின் டீசர் கூட வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : ‘சூர்யாவை சந்தித்த சந்துரு’ – பல ஆண்டுகள் கழித்து மீட் செய்த விஜய் மற்றும் சூர்யா.

- Advertisement -

ஆனால், அந்த படம் சில பல காரணங்களால் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் நடிகை லேகா, பிகினி உடையில் நடித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. நடிகை லேகா, சிம்புவுடன் ‘கெட்டவன்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படமும்வெளியாகவில்லை.

அதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் Metoo விவகாரம் வைரலாக பேசப்பட்டு இருந்த நிலையில் நடிகை லேகா, கெட்டவன் #metoo என்று பதிவிட்டிருந்தார்.நடிகை லேகா வாஷிங்க்டன், சிம்பு நடிப்பில் வெளியாக இருந்த “கெட்டவன்” படத்தில் நடித்திருந்தார் அதானல் அவர் கெட்டவன் என்று குறிப்பிட்டது சிம்பு தான் என்று பலரும் கூற தொடங்கி இருந்தனர். இதனால் அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement