சிட்டுக்குருவி இனம்.! செல்போன் டவர்.! வைரலாகும் ரஜினியின் 2.0 படத்தின் கதை

0
463
2.0

இயக்குனர் ஷங்கரின் “ஐ” படத்திற்கு பிறகு பிரமாண்ட பொருட்ச் செலவிவில் உருவாகி வரும் படம் “2.0” எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறப்படும் இந்த படத்தில் ஐ படத்தில் நடித்த எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துக்கள்ளர்.அது போக முதன் முறையாக தமிழ் சினிமாவில் விஜயமாகியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்த படம் வரும் தீபாவளிக்கும் வெளியாகும் என்று ஏதிர்பார்க்கபட்டது.ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

rajini 2.0

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக உருவாகியுள்ள இந்த படத்தில் அக்ஷய் குமார் ஒரு பறவை வேடத்தில் இருப்பதுபோல போஸ்டர்களும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் கதையும் பறவைகளை சம்மந்தப்பட்ட கதை தான் என்று ஒரு சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த படத்தில் செல்போன் டவர்களால் சிட்டுக்குருவி போன்ற அறிய பறவை இனங்கள் அழிந்து வருகிறது என்று வன ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றாரனர். அப்போது திடீரென்று ஒரு பறவைக்கு மாபெரும் சக்தி கிடைத்து விடுகிறது. அந்த பறவை தான் அக்ஷய் குமார், அவர் தனது சக்தியை வைத்து உலகில் உள்ள அணைத்து செல்போன்களையும் அழிக்கிறார்.

rajini-2-point-0

மேலும் தனது சக்தியை வைத்து இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நினைக்கிறாராம் அக்ஷய் குமார். அப்போது தான் விஞ்ஞானி வசீகரன் ஒரு ரோபோவை தயாரிக்கிறாராம். அந்த ரோபோ சக்திவாய்ந்த பறவையான அக்ஷய் குமாரை அழிக்கிறதா, இல்லையா என்பது தான் கதையாம். இந்த கதை எந்த அளவிற்கு உண்மை என்று நம்மால் யூகிக்க முடியவில்லை.