இத பண்ணுங்க அப்புறம் பொண்ணுங்கள ஒருத்தன் தொட மாட்டான்.! வைரலாகும் சிம்பு பேசிய வீடியோ.!

0
547
Simbhu-About -Pollachi

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், பல்வேறு நடிகர், நடிகைகளும் இந்த சம்பவம் குறித்து தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க : பொள்ளாச்சி பெண் கதறலை டிக் செய்த பெண்.! கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.! 

- Advertisement -

இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து சிம்பு பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அன்ஹா வீடியோவில் நடிகர் சிம்பு, அணைத்து தாய்மார்களும் தங்களது பிள்ளைகளிடம் விருப்பமில்லாத பெண்ணை தொடுவது அம்மாவை தொடுவது போல என்று சொல்லி வளருங்கள் என்று பேசியுள்ளார்.

ஆனால், இந்த வீடியோ சிம்பு பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்காக பேசிய வீடியோ இல்லை. இது கடந்த ஆண்டு வெளியான ‘எழுமின்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் போது பேசியது. ஆனால், பாலியல் குற்றங்களை பற்றி சிம்பு முன்பே பேசியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Advertisement