வலிமை படத்தில் ஸ்டண்ட் செய்தது அஜித் இல்லையாம்! இவர் தானம்- அந்த நபரே பதிவிட்ட பதிவு

0
616
- Advertisement -

வலிமை படத்தில் அஜித்திற்கு டூப் போட்ட நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசானது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார் மற்றும் போனிகபூர் தயாரித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்து உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள். இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

மேலும், அஜித் படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் அஜித்தின் வலிமை படம் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி 300 கோடியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடி வருகின்றனர். இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் மூலம் வலிமை பட கலெக்ஷனை அறிவித்திருந்தார்.

வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள்:

மேலும் இந்த படத்தில் அதிகமாக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது குறித்து ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் போட்டிருந்தார்கள். இந்த நிலையில் வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சி குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. வலிமை படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் தான். அந்த காட்சிகளை படமாக்கப்பட்ட விதமும் ஸ்டண்ட் காட்சிகளும் அனைவரையும் கவர்ந்தது. அதுமட்டுமில்லாமல் ஸ்டண்ட் காட்சிகளில் அஜித் தான் நடித்து இருக்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்த நிலையில் வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகளுக்கு டூப் போட்ட நபர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

அஜித்திற்கு டூப் போட்ட நபர்:

விஷால் என்ற நபர் தான் வலிமை படத்தில் அஜித்திற்கு டூப் போட்டுள்ளார். மேலும், வலிமை படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த வீடியோக்களையும் விஷால் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரசிகர் ஒருவரின் கேள்விக்கும் விஷால், அவர் தான் ஸ்டண்ட் செய்ததாகவும் கூறியுள்ளார். தற்போது வலிமை படத்தில் அஜித்திற்கு டூப் போட்ட நபரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் ஷாக்கில் உள்ளார்கள்.

‘ஏகே 61’ படம் பற்றிய தகவல்:

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளது. இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும், இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்றும் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருக்கிற தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள்.

Advertisement