தமிழ் சினிமாவின் அற்புத படைப்புகளில் ஒன்று எனக் கூற சுப்ரமணியபுரம் படத்திற்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அந்த படம் வெளிவந்து சமீபத்தில் 13 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ட்விட்டரில் #13YearsOfSubramaniyapuram என்ற ஹேஷ் டேக்கை கூட ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த்தனர். இந்த படம் தான் நடிகர் ஜெய்க்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. ஜெய், சசி குமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி என்று பலர் நடித்து இருந்த இந்த படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து இருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்து வைத்து இருந்தார் சசிகுமார். அதிலும் கால் ஊனமான டும்கான், மைக் செட் கடை சித்தா, கோவில் தர்மகர்த்தா மொக்க சாமி என்று பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அந்த வகையில் இந்த படத்தில் மொக்க சாமி கதாபாத்திரத்தில் நடித்தவரின் விவரம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஒரே வசனத்தில் பிரபலம் :
இந்த படத்தில் ‘சுத்தபத்தமாக தான இருக்க யாரும் பொலங்களையே’ என்று இவர் பேசிய வசனம் பெரும் ஹிட்டானது. யார் இவர் ? இவருக்கு எப்படி இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்தது ? என்பதை இந்த பதிவில் காணலாம். இவருடைய பெயர் முருகன், மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் உள்ள மார்க்கட்டில் இலை கடை வைத்து நடத்திவருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் இந்த படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக சசி குமாரும், ஜெய்யும் மதுரை மார்கெட்டுக்கு வந்தனர் அப்போது, கேமெரால எல்லாத்தையும் படம் எடுத்த போது என் கூட இருந்த ஒருத்தர் இவரையும் நடிக்க வைங்களேன் என்று சசி குமாரிடம் சொல்ல, சசி குமாரும் என்கிட்டே நடிக்கிறீங்களானேனு கேட்டார். எனக்கு நடிப்பெல்லாம் வராதுன்னு சொன்னேன்.
படத்தில் நடிக்க வந்தது எப்படி :
அவர் தான் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லைனு சொல்லி என்ன நடிக்க வச்சார். என் சீனும் படு பேமஸ் ஆகிடிச்சி. தற்போதும் யாராவது என்னை புதுசா பார்த்தல் , ‘ஏய் அந்த ஆளு தாண்டி சுப்ரமணியபுரத்துல தொடுப்பு வீட்டுக்கு போயிட்டு சாக்கடைல விழுந்து எந்திருச்சு வருவாருல்ல’ன்னு கையை காட்டிபேசுவார்கள். அப்படி சொல்வதை கேட்டு ஆரம்பத்தில் கோபப்பட்டேன். அதன் பின்னர் நம் நடிப்பதை அப்படி சொல்கிறார்கள் என்று அதை ஜாலியாக எடுத்துக்கொண்டேன்.
மனைவி பேசவே இல்லை :
என்ன ஒரு வருத்தம் என்றால் இந்த படத்தை பார்த்துவிட்டு என் மனைவி என்னிடம் ஒரு வாரம் பேசவில்லை. எல்லாம் நடிப்புதான் என்று அவரை சமாதானம் செய்வதர்க்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. தற்போதும் மாட்டுத்தாவனியில் இலைக்கடை நடத்தி வரும் முருகன் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தன் இலை தொழிலை பார்க்க சென்றுவிட்டார். சசி குமார் கூப்பிட்டால் மீண்டும் எல்லாத்தையும் எறகட்டிட்டு கிளம்பிடுவேன் என்று கூறியுள்ளார் மொக்கச்சாமி.