கடலில் பரத கலை, டிடி அக்கா பிரியதர்ஷினி அடித்து சென்ற அலை – வைரலாகும் வீடியோ (தேவையா இது என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்)

0
1227
priyadharshini
- Advertisement -

சூட்டிங் பரிதாபங்கள் என்று பிரியதர்ஷினி பதிவிட்டுள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்கள். காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-
Vijay Tv Anchor DD Sister Priyadharshini Reentry In Vijay Tv Serial

அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடித்துக் கொண்டும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். இவருடைய அக்கா தான் பிரியதர்ஷினி. இவரும் சின்னத்திரையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர். இவர் தமிழ் திரை உலகில் தாவணிக் கனவுகள், இதயகோயில் மற்றும் மலையாளத்தில் கூட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். மேலும், இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார்.

- Advertisement -

பிரியதர்ஷினி திரைப்பயணம்:

அதன் பிறகு புலி வருது, காளிதாஸ் ஆகிய பல தமிழ் படங்களில் பிரியதர்ஷினி நடித்து இருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன் என பல சூப்பர் ஹிட் டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி. தற்போது ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி. இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தனியார் நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார்.

பிரியதர்ஷினி நடன நிகழ்ச்சி:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவார். மானாட மயிலாட, பாய்ஸ் VS கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இதனிடையே பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார் பிரியதர்ஷினி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்து இருக்கிறார் பிரியதர்சினி.

-விளம்பரம்-

ரீ-என்ட்ரி கொடுத்த பிரியதர்ஷினி :

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகியின் அத்தை கதாபாத்திரத்தில் பிரியதர்ஷினி நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது என்று சொல்லலாம். இந்த சீரியலில் இவர் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பிரியதர்ஷினி நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் அவர் மதுரை ஆர்.முரளிதரன், மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டார்.

பிரியதர்ஷினி நடனமாடிய வீடியோ:

அதுமட்டுமில்லாமல் குச்சிப்புடி, கதகளி என்ற பலவிதமான நடனங்களும் கற்றுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது கடற்கரையில் நடனமாடிய பிரியதர்ஷனின் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பிரியதர்ஷினி கடற்கரையில் பாறையின் மீது அமர்ந்து நடனமாடி கொண்டிருக்கிறார். அப்போது பெரிய அலை வந்து அவரை தள்ளிவிட்டு இருக்கிறது. இதை ஷூட்டிங் பரிதாபங்கள் என்று பதிவு செய்து அதனை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பிரியதர்ஷினி . தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் வைரலாகி வருகிறார்கள்

Advertisement