விக்ரம் படத்திற்காக Leadஐ கைதி படத்திலேயே கொடுத்த லோகி – வைரலாகும் கைதி படத்தின் நரேன் வசனம்.

0
323
vikram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து கொண்டு வருகிறார். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதையாசிரியரும் ஆவார். இவர் மாநகரம் படம் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். பெரிய பிரபலங்கள் இந்த படத்தில் இல்லை என்றாலும் முதல் படத்திலேயே அனைவரையும் பிரமிக்க வைத்து இருந்தார் லோகேஷ். பின் இரண்டாவது படமான கைதியில் ஒரே இரவில் நடைபெறும் கதையை எந்த ஒரு குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் பல சுவாரசியத்துடன் தந்து இருந்தார். அதற்கு பிறகு தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பிரம்மாண்ட அளவில் இயக்கி மாபெரும் சாதனை படைத்து இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது ஒரே படத்தில் இந்தியாவின் மிக பிரபலமான கலைஞர்களான கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

விக்ரம் படத்தின் முதல் பாடல்:

சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது. இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடல் சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

படத்தின் இசை வெளியீட்டு விழா:

இதில் விக்ரம் படத்தின் படக்குழுவினரை தவிர இயக்குனர் பா ரஞ்சித், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர். விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்களை பல பிரபலங்கள் பேசி இருந்தார்கள். விழாவில் விக்ரம் பட டிரைலர் வெளியானது. இது 2நிமிடம் 39 வினாடிகள் ட்ரெய்லர் போடப்பட்டிருந்தது. ட்ரெய்லரில் கமலஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய மூவருக்கும் இடையேயான சண்டையை காட்டி இருந்தார்கள். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொடிய விலங்குகள் மான்களை வேட்டையாடும் போர்க்களத்தை ஒப்பீட்டு பின்னணியில் கதையை கொடுத்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

விக்ரம் பட டிரைலர்:

மேலும், விஜய்சேதுபதி போதைப்பொருள் கடத்தல் பணியில் தோன்றியிருக்கிறார். பகத் பாசிலின் அபாயகரமான சண்டைக்காட்சி காண்பிக்கப்படுகிறது. கோபக்காரன் போலீஸ்காரராக படத்தில் கமலஹாசன் இருக்கிறார். இறுதியில் கமல், விக்ரம் என்று மூன்று முறை உச்சரித்து ட்ரெய்லரை முடிக்கிறார். அதுமட்டுமில்லாமல் சிறப்பு வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். ஒரு ஷார்ட் ட்ரைலரில் அவர் தோன்றியதாக கூறப்படுகிறது. ட்ரைலர் வெளியானதையடுத்து படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

கைதியை வரும் Ghost :

அதுமட்டும் இல்லாமல் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்ரெய்லர் மூலம் கதையை பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை இப்படி ஒரு நிலையில் கைதி படத்தின் ஒரு காட்சியில் நரேன் “ghost” எங்கே என்று கேட்பார். இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெறும் Once Lived The Ghost என்ற வசனத்தை ஒப்பிட்டு கைதி படத்திலேயே விக்ரம் படத்திற்காக லீடை லோகேஷ் கனகராஜ் கொடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது நெட்டிசன்கள் கைதி , விக்ரம் படத்தை ஒப்பிட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement