பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சுஜிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கியிருக்கிறார். அதற்குப் பிறகு இவர் துணை கதாபாத்திரங்களில் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமா வரவேற்பு குறைந்து உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
தற்போது இவர் சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.சுஜிதாவின் அண்ணனும் மிகப்பெரிய நடிகர் தானாம். சுஜிதா அண்ணன் பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். ஆனால், இவரை எல்லோரும் சூரிய கிரண் என்று தான் அழைக்கிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற பல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு நடிகராவதை விட இயக்குனர் ஆவதில் தான் அதிக ஆர்வம்.அதன் பின் இவர் இயக்கம் பக்கம் சென்று விட்டார். தெலுங்கில் இவர் இயக்கிய படம் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. தெலுங்கில் 2003ல் வெளியான ‘சத்யம்’, ‘பிரமஸ்தரம்’, ‘ராஜூ பாய்’ என பல படங்களை இயக்கினார்.
அதற்குப் பின் இவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சூரிய கிரண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் உடல்நிலை பாதிப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும்என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூரிய குமார் தமிழில் படம் இயக்க விரும்பினார். வரலட்சுமி நடித்த ‘அரசி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தா ராய், அபிஷேக் வினோத், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, சாப்ளின் பாலு, மோகித் ராஜ், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. ஆனால், அதற்குள்ளாகவே இவர் இறந்துவிட்டார்.இவரது இறப்பிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அதே போல சகோதரனை பிரிந்து வாடும் சுஜிதாவிற்கு பலரும் ஆறுதல் கூறி வந்தனர். அண்ணனின் இறப்பிற்கு பின்னர் சிறுது நாட்களாக சமூக வலைதள பக்கமே வராமல் இருந்தார் சுஜிதா.
இப்படி ஒரு நிலையில் தனது அண்ணனின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் சுஜிதா. அதில் ‘ சேட்டா Rest In Peace, நீ என் அண்ணன் மட்டுமல்ல, என் அப்பா, என் ஹீரோ. உன் திறமை மற்றும் பேச்சை கண்டு நான் பல முறை வியந்து இருக்கிறேன். மறுபிறவி என்பது உண்மையாக இருந்தால் உன் அனைத்து கனவுகளும் புதிதாய் துவங்கட்டும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.