சூர்யாவுடன் ஹாயாக சைக்கிளில் பயணம் செய்த அஜித் – ரசிகர்கள் கொண்டாடும் அறிய புகைப்படம் இதோ.

0
2518
ajithsurya
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா போன்ற பல நடிகர்கள் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக தான் இருந்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரின் முதல் படமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதற்கு பிறகு நடிகர் சூர்யா அவர்கள் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா அவர்கள் தல அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

அதில் சூர்யா அவர்கள் கூறியது, நேருக்கு நேர் படத்தில் பல காரணங்களால் அஜித் சாரால் நடிக்க முடியவில்லை. அதனால் தான் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவரால் தான் நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்று கூட சொல்லலாம். எப்பவுமே தல அஜித் ரொம்ப தைரியமான துணிச்சலான மனிதர். படங்களில் புதுப்புது கதாபாத்திரங்களில் நடிப்பார்.படங்களில் எதாவது ஒரு வித்தியாசத்தை கொடுக்க வேண்டும் என்று ஒரு புது முயற்சி செய்து கொண்டே இருப்பார்.

- Advertisement -

அதற்கேற்ற மாதிரி அவருக்கும் அமைந்தது என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இப்படி நடிகர் சூர்யா அவர்கள் பேசிய தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதே போல இப்போது அஜித் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து சைக்லிங் சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் அஜித்திற்கு சினிமாவை தாண்டி தனிப்பட்ட முறையில் பல விஷயங்கள் புடிக்கும்.

அதில் மிகவும் முக்கியமான ஒன்று என்றால் பைக் தான். நடிகர் அஜித் பைக் பிரியர் என்பதை விட பைக் வெறியர் என்று தான் சொல்ல வேண்டும். அஜித் அடிக்கடி ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரோட்டில் சீறிப் பாய்ந்த வீடியோ கூட சமீபத்தில் வைரலானது. ஆனால், இதுவரை அஜித் மிகவும் ஹாயாக அதுவும் சூர்யாவுடன் சைக்கிள் பயணம் செய்த இந்தப்புகைப்படத்தை பலரும் கண்டிருக்க வாய்ப்பில்லை.

-விளம்பரம்-

Advertisement