பதிவுத் திருமணம் செய்த போது எடுத்த வீடியோவை இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியிட்ட மணிமேகலை.

0
29901
Manimegalai
- Advertisement -

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் தங்களுடைய இரண்டாவது வருடம் திருமண தினத்தை தன்னுடைய கணவருடன் கொண்டாடி உள்ளார். மேலும், அவர் தன் கணவருடன் திருமண நாளை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதலில் சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் மணிமேகலை. மேலும், மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் மணிமேகலை அவர்கள் கடந்த வருடம் உசேன் என்பவரை பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
manimegalai

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், சென்னையில் ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலையும், ஹுசைனும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டாலர்.

- Advertisement -

பின் இவர்கள் இருவரும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என சந்தோசமாக மகிழ்ந்து வந்தார்கள். அதோடு இவர்கள் திருமணம் குறித்து மணிமேகலை கூறியது, நாங்கள் எங்கள் காதலுக்காக பெற்றோரை மீறி திருமணம் செய்து கொண்டோம். பெற்றோர்களுடன் இருக்கும் போது பணத்தின் கஷ்டம் தெரியவில்லை. பின்னர் வெளியே வந்த போது தான் எங்களுக்கு தெரிகிறது. ஆனால், என் கணவருடன் இருக்கும் போது எனக்கு அந்த கஷ்டம் கூட தெரியாது. எல்லாமே பறந்து போய் விடும். என்னுடைய அப்பா, அம்மா எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நல்ல சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்த பின் நாங்கள் இருவரும் அவர்களிடம் பேசுவோம் என கண்ணீர் மல்க கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அவர்கள் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது தொகுப்பாளினி மணிமேகலை அவர்கள் தன்னுடைய இரண்டாவது திருமண நாளை ஒட்டி தனது கணவருடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். இது இவருடைய இரண்டாவது திருமண நாள் என்றும் குறிப்பிட்டு உள்ளார். மேலும், இவர்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இவர்கள் இருவரும் மாலை மாற்றுவது போல் பதிவு செய்து உள்ளார்கள். மேலும், ட்விட்டர் பக்கத்தில் மணிமேகலை கூறியது, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் நான் எப்போதும் உன் கூடவே இருப்பேன் என்று தன் கணவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தொகுப்பாளினி மணிமேகலை ரசிகர்கள் அவருடைய கருத்துக்களை பாராட்டியும் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement