அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘ஆழ்வார்’ திரைப்படம் மிகப்பெரிதா தோல்வி படமாக அமைந்தது. அசின், விவேக், கீர்த்தி சாவ்லா, மனோரமா போன்ற பலர் நடித்த இந்த படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்தது யாருனு தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க. அது வேறு யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகை ஸ்வேதா தான்.
நடிகை ஸ்வேதா சென்னையில் உள்ள பிரபல பி எம் ஆர் கல்லூரியில் பொறியியல் படிப்பை படித்திருந்தார். ஆரம்பத்தில் ஒரு சில விளம்பர படங்களில் நடித்த இவருக்கு, இவரது அழகான தோற்றத்தினால் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் 2007 ஆம் ஆண்டு அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார்.
முதல் படமே தல படம் என்பதால் அடுத்த படத்திலேயே இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குவது வேறு யாருமில்லை மம்முட்டி நடிப்பில் வெளியான மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதிதான்.ஆனால், இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்வேதா இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தில் மல்யுத்தம் நடக்கும் போட்டியில் போட்டி அறிவிப்பாளராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் தோன்றி இருந்தார். இவருக்கு சினிமா கை கொடுக்கவில்லை என்றாலும் சின்னத்திரை நன்றாகவே கை கொடுத்தது.