ஹீரோக்களுக்கு ஜால்ரா அடிக்காதீங்க. அட்லீயை கழுவி ஊற்றிய சுந்தர் சி.

0
13933
sundar-c-atlee
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல நடிகரும் ஆவார். மேலும்,இவர் தலைநகரம் படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானவர். ஆரம்ப காலத்தில் இவர் மணிவண்ணனிடம் உதவியாளராக தான் இருந்தார். பின்னர் ‘முறை மாமன்’ என்ற நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதற்கு பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா,அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய ‘ஆக்ஷன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும்,நடிகர் விஷால் மற்றும் தமன்னா நடிப்பில் உருவாகி வரும் படம் தான் ‘ஆக்ஷன்’. அதுமட்டுமில்லாமல் நடிகர் விஷால் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் என்று பார்த்தால் இந்த ஆக்ஷன் படம் தான்.

-விளம்பரம்-
Image result for atlee vijay"

இந்த படத்தில் தமன்னா, அகன்ஷா பூரி, சாயாசிங், ஐஸ்வர்யா லட்சுமி, ராம்கி, கபீர் சிங் உள்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும், ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாட்டில் தயாராகியுள்ள படம் ஆகும். மேலும், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று தான் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் மறைமுகமாக அட்லீயை தாக்கிப் பேசி இருந்தார். அது என்னவென்றால் தயாரிப்பாளர்களை எல்லாம் பற்றி கவலைப்படாமல் பெரிய ஹீரோ என்ற ஒரு காரணத்தினால் பிரம்மாண்ட அளவில் அளவுக்கு அதிகமாக செலவு செய்து படம் எடுக்கிறார்கள். பின்னர் தயாரிப்பாளர்களை நடுத் தெருவில் நிற்க வைத்து விடுகிறார்கள் என மறைமுகமாக பேசினார். மேலும்,இந்த கருத்து குறித்து இணையங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில் ஆக்ஷன் படம் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்சி அவர்கள் கலந்து கொண்டு அவர் பேசியது, தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்கள் எல்லாம் பெரிய ஹீரோக்கள் கிடைத்து விட்டால் போதும் பெரிய பட்ஜெட்களை வைத்து படம் எடுப்பதற்கு பிரம்மாண்ட அளவில் செலவு செய்கிறார்கள்.

இதையும் பாருங்க : என்னது கார்த்திக்குடன் காதலா? செம்பருத்தி ஷபானா சொன்ன தகவல்.

- Advertisement -

மேலும், படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நிலைமையை கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த பெரிய ஹீரோக்களுக்கு ஜால்ரா அடிப்பதையே வேலையாகும் வைத்துள்ளார்கள். பெரிய ஹீரோ என்பதால் தேவையில்லாமல் ஒரு ஷாட்டுக்கு 2000 ஆர்ட்டிஸ்டுகள் என பிரம்மாண்டமாக வைத்து செலவு செய்து விடுகிறார்கள். அதேபோல் ஷூட்டிங்கும் திட்டமிட்ட படி நடத்தி முடிப்பது கிடையாது. இதனால், அதிகமாக மன உளைச்சலும், பண விரயமும் ஆகுவது தயாரிப்பாளர்கள் தான் என சுந்தர் சி அவர்கள் கூறியிருந்தார். இவர் இப்படி பேசுவதை எல்லாம் வைத்து பார்க்கும் போது அதிகமாக பாதிக்கப்பட்டது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தான். ஏனென்றால் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் மெர்சல்.

Image result for sundar c"

இந்த படத்தில் அளவுக்கு அதிகமான செலவு ஆனது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமில்லாமல் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனமே சுந்தர் சி யை வைத்து பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருந்த ‘சங்கமித்ரா’ படமும் இதனால் கைவிடப்பட்டது என தெரிந்தது. அதனால் இதை மனதில் வைத்து தான் சுந்தர் சி ஆக்ஷன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசி இருப்பார் எனவும் ஒரு சில பேர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் அவருடைய கருத்துக்கள் எல்லாம் ஏற்றுக்கொள்ள வகையில் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement