விஜய்கிட்ட இதுக்கப்புறம் உங்ககிட்ட வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் – ஏமாற்றத்தை பகிர்ந்த சுந்தர் சி.

0
1860
Sundarc
- Advertisement -

விஜய் வைத்து இனி படம் இயக்க வாய்ப்பில்லை என்று இயக்குனர் சுந்தர் சி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் சுந்தர்.சி.

- Advertisement -

ஹூரோவாக சுந்தர்.சி :

பின் இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தலைநகரம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் நாயகனாக சுந்தர்.சி நடித்திருந்தார். இது தான் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த முதல் தமிழ் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு’ போன்ற பல படங்களில் சுந்தர்.சி நடித்து இருக்கிறார்.

சுந்தர் சி நடிக்கும் படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் அவர் தானே இயக்கிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். இறுதியாக சுந்தர் சி அரண்மனை 3 படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் சுந்தர் சி யின் காபி வித் காதல் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சுந்தர் சி. அளித்த பேட்டி:

அதில் அவர் விஜய் குறித்து, நான் விஜய் இடம் நிறைய கதைகளை சொன்னேன். ஒவ்வொரு முறையும் அந்த கதை எடுக்க முடியாமல் போனது. அவர் அடுத்து பார்க்கலாம் என்று சொன்னார். கடைசியாக ஒருமுறை இது தான் கடைசி. இதில் விஜய் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் படத்தை விட்டுவிடலாம் என்று முடிவு செய்து போனேன். அப்போதும் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

விஜய் குறித்து சொன்னது:

அதற்கு பின் நான் விஜய் வைத்து கதை எடுப்பதை விட்டுவிட்டேன். ஆனால், அவரை வைத்து படம் இயக்காமல் போனது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. இனி அவரை வைத்து படம் இயக்கவும் வாய்ப்பில்லை என்று கூறியிருக்கிறார். தற்போது சுந்தர். சி அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடிக்க முதலில் விஜய்யை தான் சுந்தர் சி அணுகி இருந்தார். ஆனால், அப்போது இருந்த சூழலில் காமடி கதைகளில் நடிக்க விருப்பம் இல்லை என்று விஜய் அந்த படத்தை நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement