கார்த்திக் சார் கூட Ok சொல்லிட்டார் – உள்ளத்தை அள்ளித்தா 2 எடுக்காமல் போன காரணம் சொன்ன சுந்தர் சி.

0
327
- Advertisement -

உள்ளதை அள்ளித்தா 2 கதை குறித்து சுந்தர் சி அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி. இவர் 1995-ஆம் ஆண்டு வெளி வந்த ‘முறை மாமன்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார். இது தான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். இதில் ஹீரோவாக ஜெயராம் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ‘முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகி ராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத் தேடி, உனக்காக எல்லாம் உனக்காக, உள்ளம் கொள்ளை போகுதே, ரிஷி, அன்பே சிவம், வின்னர், கிரி, லண்டன், சின்னா, இரண்டு, கலகலப்பு 1 & 2, தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்ஷன்’ என அடுத்தடுத்து தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார் சுந்தர்.சி.

- Advertisement -

ஹூரோவாக சுந்தர்.சி :-

பின் இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர் என்பதுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று அடுத்ததாக ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளி வந்த திரைப்படம் ‘தலைநகரம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுராஜ் இயக்கியிருந்தார். இதில் நாயகனாக சுந்தர்.சி நடித்திருந்தார். இது தான் சுந்தர்.சி ஹீரோவாக நடித்த முதல் தமிழ் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ‘வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, இருட்டு’ போன்ற பல படங்களில் சுந்தர்.சி நடித்து இருக்கிறார்.

சுந்தர் சி நடிக்கும் படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் அவர் தானே இயக்கிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார். இறுதியாக சுந்தர் சி அரண்மனை 3 படத்தில் நடித்து இருந்தார். தற்போது தலைநகரம் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் சுந்தர் சி யின் காபி வித் காதல் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், பாடல்கள் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

சுந்தர் சி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் சுந்தர் சி அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் உள்ளத்தை அள்ளித்தா 2 படம் குறித்து கூறியிருந்தது, அப்போது கார்த்திக்- ரம்பாவின் உள்ளத்தை அள்ளித்தா படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. உடனே நான் உள்ளத்தை அள்ளித்தா 2 எடுக்கலாம் என்று கார்த்திக் சாரிடம் சொன்னவுடன் அவரும் பண்ணுங்கள் என்று சொன்னார். அதற்கான கதை எல்லாம் எழுதினேன். ஓபனிங் சீனிலே ரம்பா இறந்த மாதிரி காண்பித்து சோகம் தாங்க முடியாமல் கார்த்திக் சார் அமெரிக்க செல்கிறார்.

உள்ளத்தை அள்ளித்தா 2 படம்:

ஜெயிலில் இருந்து மணிவண்ணன் சார் வருகிறார். அங்கே கூத்தாடும் பெண்ணாக ரம்பாவை பார்க்கிறார். இப்படி டீவ்ஸ்ட்களுடன் கதை ஓபன் ஆகிறது. அப்போது இன்னும் விறுவிறுப்பாக படம் ஓடிக் கொண்டிருந்ததால் பார்ட் 2 எடுத்து சொதப்பிவிட்டால் அதையும் சேர்த்து திட்டுவார்கள் என்ற பயத்தில் விட்டு விட்டேன். ஆனால், பார்ட் 2க்கு கார்த்திக்,ரம்பா,மணிவண்ணன்,கவுண்டமணி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்று கூறியிருந்தார். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் உள்ளத்தை அள்ளித்தா. இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Advertisement