கேலி, கிண்டல்கள் எனக்கு கேட்டு, கேட்டு பழகிடுச்சு – 200 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ள சுந்தரி சீரியல் நடிங்கரின் வேதனை பேட்டி.

0
605
sundari
- Advertisement -

சன் டிவியில் ஔிபரப்பாகும் முன்னனி சீரியலில் ஒன்று சுந்தரி சீரியல்.இதில் சோட்டு என்ற கதாபாத்திரத்தில் வரும் கோபிநாத்தை தனியார் யூடியூப் நிறுவனம் இன்டர்வயூ எடுத்தது. அதில் கோபிநாத் கூறியது. என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. சின்ன வயசுலயே ஊரை விட்டு ஓடி வந்துட்டேன். ஆரம்பத்தில் சென்னைக்கு வந்ததும் கிடைக்கிற எல்லா வேலைகளும் பண்ணியிருக்கேன். நாமளும் நடிக்கணும்னு ஆசை வந்ததுமே அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பிச்சிட்டேன். சினிமாவைப் பொறுத்தவரை நல்லா நடிக்கணும், திறமையா இருக்கணும். இது ரெண்டும் இருந்தா நிச்சயம் நமக்கு ஏதாவதொரு ஒரு இடம் அதில் கிடைக்கும்னு தொடர்ந்து போராடினேன். அந்தப் போராட்டத்தில் பல அவமானங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொண்டேன். அதையெல்லாம் மீறி தான் இன்றைக்கு சினிமாவில் பயணிச்சிட்டு இருக்கேன். மதிக்கத்தக்க எந்தக் கேரக்டரும் அவ்வளவு சீக்கிரம் நமக்கு கிடைக்காது. நகைச்சுவை கதாபாத்திரம் தான் நமக்குக் கொடுப்பாங்க. அதையெல்லாம் வேண்டாம்னுலாம் சொல்ல முடியாது.

-விளம்பரம்-

பொது வாழ்வில் சந்திக்கும் சிரமங்கள் :-

- Advertisement -

பொது வாழ்வில் நாங்கள் மேற்கொள்ளும் சிரமங்கள் கொஞ்சம் நெஞ்சம் அல்ல. ஒரு எடை அதிகம் உள்ள பொருளையோ தூக்க முடியாது நகர்த்தவும் முடியாது. சற்று உயரமான இடங்களில் இருக்கும் பொருட்களை எடுக்க முடியாது மிகவும் சிரமமாக இருக்கும் என் மனைவி அவர் சமைக்கும்போது ஸ்டூல் போட்டு ஏறி நின்று சமைக்க வேண்டும். நல்லது கெட்டது என வெளியே எங்கும் செல்ல முடியாது. அப்படியே கண்டிப்பாக போக வேன்டும் என்ற சுழல் ஏற்பட்டு சென்றாலும் சாப்பிட ஹோட்டலுக்கு ஒன்று போகின்றோம் என்றால் டேபிள்கள் சேர்கள் என எல்லாம் அனைத்தும் உயரமாக இருக்கும் அங்கு அமர்ந்து சாப்பிட முடியாது பஸ்சில் ஏறி வெளியூர் செல்ல வேண்டும் என்றாலும் பஸ் படிக்கட்டுகள் உயரமாக இருக்கும் பஸ்ல சீட்டு இருக்காது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாற்று திறனாளி இருக்கையிலும் வேறு யாராவது அமர்ந்திருப்பார்கள் இதுபோன்று எண்ணற்ற சிரமங்கள் எங்களுடைய பொது வாழ்வில் மேற்கொண்டு தான் இருக்கிறோம்

கோபி மனைவிக்கு கல்யாணம் என்றாலே பயம்தானாம் :-

-விளம்பரம்-

இதுவரைக்கும் 60 படங்கள்கிட்ட பண்ணியிருக்கேன். 200 சீரியலுக்கு மேல நடிச்சிருக்கேன். நல்லா நடிக்கிறேன்னு என் நடிப்பை பாராட்டி நிறைய விருது கொடுத்து என்னை கெளரவிச்சிருக்காங்க என்று பேசினார். எங்களுடையது அரேஞ்சிடு மேரேஜ். ஆரம்பத்தில் கல்யாணம்னு சொன்னதுமே எனக்கு பயமா இருந்துச்சு. ஸ்கூல் படிக்கும்போது நிறைய பேர் என்னை கிண்டல் பண்ணியிருக்காங்க. அதனால பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சதுமே எங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கல்யாணம் பற்றி நிறைய பயம் இருந்துச்சு. அம்மா எடுத்துச் சொன்ன பிறகுதான் ஓகே சொன்னேன். எனக்கு சினிமா ரொம்பப் புதுசு. கல்யாணத்துக்கு பிறகு தான் சினிமா பற்றி தெரிஞ்சுக்கிட்டேன் என்பவரிடம் குடும்பத்தலைவி வாழ்க்கை எப்படியிருக்கு எனக் கேட்டோம்.

குழந்தை எங்கள் போல் இல்லாதது பெரும் மகிழ்ச்சி :-

வெளியில் எங்கேயும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து போக முடியாது. எங்களை பார்த்து சிரிச்சிட்டே போவாங்க. எங்க உருவத்தை வச்சு கேலி, கிண்டல் பண்ணுவாங்க. மாசமா இருக்கேன்னு தெரிஞ்சப்ப ரொம்பவே பயந்தேன். ஒவ்வொரு முறை ஸ்கேன் பார்க்கும்போதும் குழந்தை நார்மலா இருக்குன்னு சொல்லுவாங்க. ஆப்ரேஷன் பண்ணி குழந்தை பிறந்த பிறகு முதலில் குழந்தையோட கை, கால் பார்த்துதான் சந்தோஷப்பட்டேன். அவள் உயரமா இருந்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இதுவரை நாம ஆசைப்பட்டு நமக்குக் கிடைக்காத, நம்மளுக்கு இந்த வாழ்நாள் முழுவதும் கிடைக்காதுன்னு தெரிஞ்ச ஒரு பொருள் நம்ம கையில் கிடைச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.அப்படியான உணர்வு தான் எனக்கு இருந்துச்சு.

அவர் மகள் தன்ஷிகாக்கு IAS கனவு :-

பல சில விஷயங்களை நாம பர்சனலா எடுத்துக்கக் கூடாது. அது நம்மளையும் சரி, நம்ம கரியரையும் சரி பாதிக்கும். என நம்மிடையே பாசிடிவ் உணர்வோடு பேசினார். கேலி, கிண்டல்கள் எனக்கு கேட்டு, கேட்டு பழகிடுச்சு. பொது இடத்தில் மத்தவங்க மேல தப்பு இருந்தாலும் நாம எதிர்த்து கேள்வி கேட்டா நம்ம குறையைத்தான் முதலில் சுட்டிக்காட்டி பேசுவாங்க. அந்த இடத்தில் அதுக்கப்புறம் நம்ம எதுவே பேச முடியாது. இப்படி பலர் பண்ணியிருக்காங்க. எங்களுக்கு காசு, பணம் தேவையில்லைங்க.. ஃப்ரெண்ட்லியா எங்ககிட்ட பழகினாங்கனா அது போதும்! குட்டை, குள்ளம் என்கிற வார்த்தை எங்களை ரொம்ப காயப்படுத்துது” என்றவரின் கரத்தை அவருடைய மகள் தன்ஷிகா இறுகப் பற்றிக் கொண்டார். அந்த சூழலை மாற்ற தன்ஷிகாவிடம் பேசினோம்.
நான் இப்ப ஏழாம் வகுப்பு படிக்கிறேன், எனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை உள்ளதாக கூறினார் தன்ஷிகா.

மாற்றங்களை நோக்கி காத்திருக்கிறோம் :-

“எங்களுக்கு எந்த முன்னுரிமையும் கிடைக்காது. எல்லாத்துக்குமே மிகப்பெரிய போராட்டம் பண்ண வேண்டியிருக்கும். நான் சினிமாவை நம்பித்தான் வாழுறேன். எனக்கு எப்பவாச்சும் தான் வேலை கிடைக்கும். வேலை இல்லாம சிரமமாகத்தான் இருக்கு. இப்ப ஒரு மாசமா எனக்கு வேலை இல்ல. வீட்டு வாடகை, பொண்ணோட படிப்பு செலவுன்னு எல்லாத்துக்கும் பணம் ரெடி பண்ண கஷ்டமாகத்தான் இருக்கு. மனசுல அதிக கவலை இருக்குங்க. நாங்க லோன் கேட்டாகூட யாரும் கொடுக்க முன்வர மாட்டேன்றாங்க. அரசு சார்பில் எந்த உதவித்தொகையும் இப்ப வரைக்கும் எங்களுக்கு வர்றது இல்ல. வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். இப்ப என் மனைவி பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க. எனக்கு இல்லைன்னாலும் அவங்களுக்காகவாச்சும் அரசாங்கத்துல ஏதாவது வேலை ரெடி பண்ணிக் கொடுத்து எங்க வாழ்க்கைக்கு உதவலாம். நானும் சிஎம் செல் வரை மனு கொடுத்துட்டேன். இப்ப கூட டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியிருக்காங்க என்ற கோபி கூறினார். இப்படியாக மாற்ங்களை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாக கூறினார்கள்.

Advertisement