சிவகார்த்திகேயனின் அந்த சீன்ல நடிச்சேன்னு வீட்ல சொல்ல முடியல – தன்னுடைய முதல் படம் குறித்த ஏமாற்றத்தை பகிர்ந்த சுந்தரி கேபி.

0
2312
Gabriella
- Advertisement -

பொதுவாகவே வெள்ளித்திரை பிரபலங்களுக்கு எந்தளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறார்கள். அதிலும் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கேப்ரில்லா நடிக்கும் சீரியல்:

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா. இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கேப்ரில்லா திரைப்பயணம்:

இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து தனக்கென அதோடு இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது.

கேப்ரில்லா நடிக்கும் சீரியல்:

மேலும், இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் கேப்ரில்லா. தற்போது சீரியலில் சுந்தரியின் கணவர் இரண்டாவது மனைவியின் வளைகாப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். சுந்தரி எல்லோருக்கும் உண்மை தெரிந்து விடுமோ? என்ற பயத்திலும் கவலையிலும் இருக்கிறார். நல்லபடியாக வளைகாப்பு முடிந்து வருகிறார்கள். ஆனால், சுந்தரி தன் கணவனின் இரண்டாவது மனைவி குடும்பத்திலேயே வேலை செய்துகொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

சுந்தரி சீரியல் கதை:

எப்போது உண்மை வெளியே வரும்? சுந்தரி தான் முதல் மனைவி என்று தெரிய வருமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இப்படி சூட்டிங்கில் கேப்ரில்லா பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கிறார். அதோடு இசையின் ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமானும் இவரை இன்ஸ்டாவில் பாலோ செய்கிற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கேபி, சினிமாவில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு குறித்து பேசி இருக்கிறார். அதில் சிவகார்த்திகேயன்,, விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் ஒரு பாடலில் சிறிய காட்சியில் நடித்ததாகவும் ஆனால், அதை என் அம்மா பார்ப்பதற்குள் போயிட்டது என்றும் இதனால் நான் அந்த காட்சியில் நடித்தேன் என்று வெளியில் சொல்ல முடியவில்லை என்றும் இருப்பினும் கபாலி படத்தில் ரஜினி சார் பக்கத்தில் அமர்ந்து வசனம் பேசி நடித்ததாவும் கூறியுள்ளார்.

Advertisement