சுந்தரபாண்டியன் பட நடிகர் சௌந்தரராஜனுக்கு திருமணம் முடிந்தது.! அழகான மணமகள் புகைப்படம் உள்ளே !

0
533
soundrarajan

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான நடிகர் சசி குமார் நடித்த “சுந்தரபாண்டியன் ” படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தவர நடிகர் சௌந்தரராஜன்.இவர்க்கு இன்று காலை திருமணம் நடந்து முடிந்துவிட்டது. அவரின் திருமணத்திற்கு பல்வேறு சினிமா நடிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Soundararaja actor

குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தமிழ்நாடு பாரத் சினி அவார்ட்ஸ் சார்பில், சிறந்த அறிமுக வில்லன் நடிகர் என்று விருதும் வழங்கப்பட்டது .

அதன் பின்னர் தமிழில் வெளியான பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். இவர் தமிழில் வெளியான “ஜிகிர்தண்டா, ரெக்க, தெறி ” போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். 34 வயதாகும் இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தமன்னா என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

actor Soundararaja

Soundararaja

இந்நிலையில் இன்று (மே 25 ) இவரது திருமணம் நடந்துள்ளது, இந்த திருமணத்திற்கு நடிகர் சௌந்தராஜாவின் திரை உலக பிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். இவரது திருமண வாழ்வு இனிதே அமைய நாமும் வாழ்த்துவோம்.