ஒரு வேலை மட்டும் தான் வீட்டில் சமையல். மீதி வேலை ஷூட்டிங்கில். பர்சனல் வாழ்கை குறித்து பகிர்ந்த மணிமேகலை.

0
55484
manimegalai
- Advertisement -

முதலில் சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து வந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் மணிமேகலை. மேலும், மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மணிமேகலை அவர்கள் கடந்த வருடம் உசேன் என்பவரை பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
மணிமேகலை

- Advertisement -

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், சென்னையில் ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலையும், ஹுசைனும் நீண்ட காலமாக காதலித்து வந்தார்கள். மேலும், மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : மாஸ்டர் படத்திற்காக பிரான்ஸ் நாட்டின் கலையை கற்கும் மாளவிகா மோகனன்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கூப்பித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வருகிறார் இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று உள்ள மணிமேகலை தனது பர்சனல் வாழ்க்கை குறித்தும் தனது கணவர் பெற்றோர் குறித்தும் கூறியுள்ளார் அந்த பேட்டியில் பேசியுள்ள மணிமேகலை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி பின்னர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் தான் விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நானும் கோமாளியாகத்தான் இருக்கிறேன், எனக்கு சுத்தமாக சமைக்கத் தெரியாது.

-விளம்பரம்-
மணிமேகலை, ஹுசைன்

இப்போதைக்கு வீட்டில் சமையல்காரர் தான் சமைக்கிறார். மதியம் மட்டும்தான் சமைத்துக் கொடுப்பார்கள் மூன்று வேளைக்கும் வீட்டில் சமைக்க சொன்னால் குடும்பத்திற்கு கட்டுப்படியாகாது. அதனால் ஒருவேளை தான் வீட்டில் சமைப்பார்கள். காலையில் சாப்பிட்டு விடுவேன் நாங்கள் இருவரும் இப்போது பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஒரு நல்ல நிலைமைக்கு வந்தால் தான் எங்களை வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பலரும் என்னை கலாய்க்கிறார்கள். என்னுடைய கணவர் மிகவும் பாவம் என்று கூறுகிறார்கள். மற்றவர்கள் சமைக்கும் போது எனக்கும் சமைக்கவேண்டும் என்று ஆர்வமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் மணிமேகலை.

Advertisement