உங்க குழந்தைங்க கிட்ட இந்த கேள்விய கேப்பீங்களா ? ஷில்பா ஷெட்டிக்கு குவிந்த கண்டனம். நோட்டீஸ் அனுப்பிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்.

0
1579
Shilpa
- Advertisement -

குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக உரையாடல் நடத்தியதற்கு ஷில்பா செட்டி மீது குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் மூலமாக பாஜிகர் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அப்படியே இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். மேலும், தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து ஷில்பா நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஷில்பா தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் இருந்தார்.

- Advertisement -

ஷில்பா ஷெட்டியின் திரைப்பயணம்:

இதைத்தொடர்ந்து சில்பா செட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று இந்தியா முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் சில்பா செட்டி பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஷில்பா குறித்த தகவல்:

இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சில்பா செட்டியால் இரண்டாம் குழந்தை பெற்று எடுக்க முடியாத காரணத்தினால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார். இது குறித்து அப்போது ஷில்பாவை பலரும் விமர்சித்து இருந்தார்கள். தற்போது இவர் படங்களில் நடித்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் யோகா தொடர்பான விழிப்புணர்வையும் சில்பா செட்டி நடத்தி இருக்கிறார். மேலும், இவர் ஐபிஎல் உரிமையாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் ஷில்பா செய்த செயல்:

இது மட்டுமில்லாமல் இவர் பல பிசினஸ்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் ஷில்பா மீது குழந்தைகள் பாதுகாப்பு மையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, ஷில்பா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் சோனி தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் டான்சர். இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஷில்பா, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.

ஷில்பா ஷெட்டிக்கு அனுப்பிய நோட்டீஸ்:

இப்படி ஒரு நிலையில் நிகழ்ச்சியில் கலந்து இருக்கும் குழந்தையிடம் அவருடைய பெற்றோர்கள் குறித்து ஆபாசம் மற்றும் வெளிப்படையான பாலியல் கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டித்து கமென்ட் போட்டிருந்தார்கள். இதனை அடுத்து குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஷில்பா ஷெட்டி, கீதா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு சில்பா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement