வானத்தை போல சீரியல் : ஹீரோவின் முகத்தில் காரி துப்பிய நடிகை. ஸ்ரீ கொடுத்த விளக்கம்.

0
1671
Sree
- Advertisement -

வானத்தைப்போல சீரியல் நடிகரின் முகத்தில் நடிகை காரி துப்பி இருக்கும் உண்மையான தகவல் தற்போது
இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் வானத்தைப்போல. இந்த தொடர் அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த தொடரில் கதாநாயகி துளசி ரோலில் மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். சின்ராசுவாக நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும், இந்த சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும், சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது இந்த சீரியலில் பொன்னி மனசு மாறி தன்னுடைய கணவர் சின்ராசுவுடன் வாழ துடிக்கிறார். ஆனால், சின்ராசு அவர்கள் பொன்னி சரவணனை தான் காதலிக்கிறார் என்று பொன்னி கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வானத்தைப்போல சீரியல்:

இன்னொரு பக்கம் துளசி கர்ப்பமாக இல்லை என்ற உண்மை மொத்த குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. இதனால் அனைவருமே கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். பின் ராஜபாண்டியும் ,அவருடைய அப்பாவும் சேர்ந்து துளசியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்கள். இதைக் கேட்டு சின்ராசு அவர்களிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாறி மாறி இருவரும் சண்டை போடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி ராஜபாண்டியன் அப்பா சின்ராஸின் முகத்தில் எச்சில் துப்பி விடுகிறார்.

நடிகர் முகத்தில் காரி துப்பிய காட்சி:

இந்த அவமானம் தாங்க முடியாமல் தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு சென்று விடுகிறார். இப்படி பரபரப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ மீது காரி துப்பிய நடிகர் குறித்த விபரம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே இந்த மாதிரி எச்சில் துப்புவது போன்ற காட்சிகளுக்கு சோப்புனுறை என்று வேறு எதாவது கொண்டு வருவார்கள். ஆனால், நடிகர் ஸ்ரீ உண்மையாகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்

-விளம்பரம்-

பொன்னி செய்த வேலை:

இதனால் நடிகர் ராஜபாண்டியன் அப்பாவாக நடிக்கும் மகாநதி சங்கர் என்னால் வேறொரு நடிகர் மீது துப்ப முடியாது என்று மறுத்துவிட்டார். என்ன செய்வது என்று புரியாமல் இருந்தபோது பொன்னியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் சாந்திணியிடம் கேட்டிருக்கிறார்கள். அவரும் தயங்கி இருக்கிறார். பின் ஸ்ரீ கேட்டதற்கு சாந்தினி முகத்தில் எச்சில் துப்பி இருக்கிறார். மேலும், இது குறித்து நடிகர் ஸ்ரீ கூறியிருப்பது, உண்மைதான். இதில் ஒன்றும் எந்த தப்பும் இல்லை. வெறும் பரபரப்புக்காக பண்ணவில்லை. நான் சீரியல் நடிக்க ஆரம்பித்து பல வருடங்களாகிவிட்டது.

ஸ்ரீ கொடுத்த விளக்கம்:

என் தொழில் மீது நான் காட்டுகிற உண்மையான அக்கறை தான் காரணம் என்று நம்புகிறேன். சினிமா, சீரியல் இரண்டும் எனக்கு வேறு வேறு வேலை இல்லை. திரையின் அளவில்தான் வித்தியாசம். காட்சிகள் எதார்த்தமாக வரவேண்டும் என்றால் அதற்கு ஏத்த உழைப்பை போடணும். அதனால் தான் காட்சி இயல்பாக இருக்கட்டும் என்று அப்படி நடிக்க சம்மதித்தேன். சக நடிகர் நடிக்க மறுத்தது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சாந்தினிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

Advertisement