தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் நடித்த வாரிசு, துணிவு படம் இன்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய் பல படங்களுக்கு பிறகு குடும்ப கதையில் நடிப்பதினால் ரசிகர்கள் வாரிசு படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக விழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யுடைய அம்மா ஷோபா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
விஜய் தாய் ஷோபா :
அந்த பேட்டியில் விஜய்யின் தாய் ஷோபாவிடம் வாரிசும், துணிவும் ஒன்றாக வெளியாக போவது உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷோபா இதற்கு முன்னர் 2014ல் வீரமும், ஜில்லாவும் ஒன்றாக வந்தது. ஆனால் இந்த படங்கள் ஒன்றாக வரும் என்று எனக்கு அவர்கள் சொன்ன பிறகுதான் தெரியும். மேலும் தான் வாரிசு, துணிவு இரன்டு ட்ரைலர்களையும் பார்த்து விட்டதாகவும் ஒரே நாளில் வாரிசு படத்தையும் துணிவு படத்தையும் பார்க்கலாம் என்று இருப்பதாக கூறினார்.
அஜித், விஜய் இருவரும் சமம் தான் :
பின்னர் அஜித் மற்றும் விஜய் உடைய ஒற்றுமை குறித்து கேட்டபோது`விஜய் மற்றும் அஜித் இரண்டு குடும்பமும் அவ்வப்போது சந்தித்து கொள்வார்கள். சாப்பிடுவதற்கு வருவார்கள், நானும் பார்த்திருக்கிறேன், கேள்வியும் பட்டிருக்கிறேன். சொல்லப்போனால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. அஜித்துடைய மனைவி ஷாலினி கூட எங்களுடைய குடும்பத்துடன் பழக்கத்தில் தான் இருக்கிறார். சமீபத்தில் கூட கோவிலில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது அஜித் மற்றும் விஜய் இருவரும் என்னுடைய குழந்தைகள் தான் என்று ஷோபா கூறியது குறிப்பிடதக்கது.
பிரித்து பார்த்தது கிடையாது :
மேலும் தனக்கு அஜித் அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினர். மேலும் தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய படங்கள் வரும் போது இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் அது சினிமாதுறைக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அதோடு நான் இரண்டு பேருடைய ரசிகை என்பதால் எனக்கும் மகிழ்ச்சி. அஜித் அவர்களை நான் இது வரைக்கும் பிரித்து பார்த்தது கிடையாது. கோவிலில் கூட வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றுதான் கூறியிருந்தேன்.
அஜித்தை மிகவும் பிடிக்கும் :
மேலும் அஜித் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய குரல், நிறம், ஹேர் ஸ்டைலில், அவர் நடித்த வாலி படம் மிகவும் பிடிக்கும் என்றார். அதோடு அஜித் தன்னுடைய திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். சில சமயங்களில் நாங்கள் நடைப்பயிற்சி செய்யும் போது அவருடைய குடும்பமும் அதே இடத்திற்கு வரும், ஒரு முறை அஜித் மற்றும் ஷாலினியையும் பார்த்திருக்கிறோம், அது போன்று நாங்கள் குடும்ப நண்பர்கள் எனக் கூறினார்.
மைக்ல ஒப்பான சொல்லிட்டார் அஜித் :
ஒரு முறை ஒரு படத்தின் இசைவெளியிட்டு விழாவின் போது அஜித் வந்திருந்தார். அப்போது மேடையில் பேசுகையில் அஜித் கூறியது “ராஜாவின் பார்வையிலேயே” படத்தின் போது விஜய்க்கு சாப்பாடு கொடுத்து விடும்போது எனக்கும் கொடுத்து விடுவார் என்று மைக்கில் வெளிப்படையாக சொல்லிவிட்டார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அதை நீங்க இப்படி மேடையில் சொல்கிறீர்களே என கேட்ட போது அஜித் கூறியது ‘என்னால் அந்த நேரத்தை மறக்க முடியாது அவ்வளவு அன்புடன் சாப்பாடு கொடுத்து விடும் போது எனக்கும் கொடுத்து விடுவீர்கள் என்று கூறினார். என பல விஷியங்களை விஜய்யும் அம்மா ஷோபா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.