கை கூடாத லாஸ்லியா காதல், கவினுக்கு விரைவில் திருமணம் ? எப்போது? பெண் யார் தெரியுமா ?

0
1789
kavin
- Advertisement -

இன்னும் சில வாரங்களில் நடிகர் கவினுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு தன்னுடைய நண்பர்களின் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் கவின் நுழைந்தார். பிறகு இவர் 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

- Advertisement -

கவின் திரைப்பயணம்:

பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேர்ந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்தது. இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானது.

டாடா படம்:

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கவின் நடித்துள்ள “டாடா” படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிந்து என்ற கதாபாத்திரத்தில் அபர்ணாதாஸ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தனர். இதனை அடுத்து கவின் அவர்கள் இரண்டு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கவின் திருமணம்:

இந்த நிலையில் கவினுக்கு திருமணமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அதாவது வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி தான் கவினுக்கு திருமணம் ஆக இருக்கிறது. அவருடைய வீட்டில் பெண் பார்த்திருக்கிறார்கள். அவரை தான் கவின் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் போட்டியாளராக பங்கு பெற்றபோது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் தமிழர் லாஸ்லியாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

கவின்-லாஸ்லியா காதல்:

இவர்களுடைய காதல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங்காக இருந்தது. இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு இருவரும் காதலிக்கவில்லை பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார்கள். தற்போது இருவருமே கேரியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனை அடுத்து கவின் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண், திருமண இடம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இது குறித்து கவின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது.

Advertisement