அந்த வீடியோவுக்கு வந்த நெகடிவ் கமண்ட்ட பாத்து வேணும்னு தான் அதை பண்ணேன் – கேலிக்கு உள்ளான இங்கிலிஷ் பேச்சு குறித்து ராஜலக்ஷ்மி.

0
560
- Advertisement -

‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி. விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.அதோடு இந்த நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். இதனை தொடர்ந்து இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள்.

- Advertisement -

மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.தற்போது இவர்கள் சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். அதே போல ராஜலக்ஷ்மியும் லைசன்ஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருவது வழக்கம் அந்த வகையில் சமீப காலமாக ராஜலக்ஷ்மி அடிக்கடி மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இவரது இந்த Transformationஐ பலர் பாராட்டினாலும் ஒரு சிலர் கேலி செய்தனர். ஆனால், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ராஜலக்ஷ்மி வெளிநாட்டில் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசி உரையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராஜலக்ஷ்மி ‘அக்டோபர் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட ஏழு நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறோம். ஆங்கிலம் தேவை என்பது எனக்கு அவசியமாக இருந்தது. எப்படியாவது அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன். ஆனால், பேசும் போது தான் நாம் எந்த அளவிற்கு பேசுகிறோம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்ற முயற்சி தான் அந்த வீடியோ.

ஆனால் அதற்கு எவ்வளவு கேவலமான கமெண்டுகள். அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால் மட்டும் தான் இப்படி எல்லாம் கமெண்ட் செய்ய முடியும். அந்த வீடியோவிற்கும் அர்ப்பனுக்கு வாழ் வந்தால் என்ற பழமொழிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. உடை என்பது என்னுடைய சுதந்திரம், என் சௌகரியத்திற்காக நான் எப்படி வேண்டுமானாலும் போட்டுக் கொள்வேன். எனக்கு இருக்கும் சுய ஒழுக்கத்தை நான் பின்பற்றுவேன் . உடல் கேலி செய்பவர்களை நான் பிற்போக்குவாதிகளாகத்தான் பார்க்கிறேன் அந்த வீடியோவில் வந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு அதே உடையில் 5, 6 வீடியோ எடுத்து போட்டேன்.

Advertisement