‘நீங்க இல்லையேல் நான் இல்லை’ – தான் வாங்கிய புதிய கார் முன் கெத்தாக போஸ் கொடுத்த பூவையர். விலை இத்தனை லட்சமா ?

0
709
Poovaiyar
- Advertisement -

சூப்பர் சிங்கர் பிரபலம் பூவையர் புது கார் வாங்கி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி என்றால் சொல்லவே வேண்டும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி படு பேமஸ். வருடம் வருடம் சிறியவர்கள், பெரியவர்கள் என தனி தனியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஜூனியர், சீனியர் என அனைத்து தரப்பினருக்கும் சினிமா உலகில் மாபெரும் வாய்ப்பை அள்ளித் தந்து வருகிறது. சமீபத்தில் தான் ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இது அனைவருக்கும் தெரியும். மேலும், சிறுவர்களுக்காக நடந்த இந்த நிகழ்ச்சியில் பல பேர் பிரபலங்கள் ஆகி இருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூவையர்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் பூவையர்:

இவர் சிறுவர்கள் மட்டுமில்லாமல் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர் பூவையர். இவரை “கானா ராக்ஸ்டார்” என்று தான் அழைப்பார்கள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் இவருடைய வாழ்க்கை பாதை மாறியது என்று சொல்லலாம். மேலும், ஜூனியர் சீசனில் இவர் டைட்டில் பட்டத்தை தட்டி சென்று இருந்தார்.

பூவையாரு திரைப்பயணம்:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சென்னை பாஷை பேசியும், தன்னுடைய கானா பாடலால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தவர் பூவையர். கடந்த 2019 ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளி வந்த “பிகில்” படம் திரையரங்களில் வேற லெவல்ல தூள் கிளப்பியது. விஜய்யின் பிகில் படத்தில் “வெறித்தனம்” என்ற கானா பாடலை சூப்பர் சிங்கர் பூவையர் பாடி இருக்கிறார். அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலும் பூவையார் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பூவையர் நடிக்கும் படங்கள்:

அதுமட்டும் இல்லாமல் பூவையர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் அவர்கள் நடிக்க இருக்கும் “விக்ரம் 58” திரைப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமாவில் இசை அமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் ஓன்றில் பூவையாரு பாடி இருக்கிறார். இப்படி பூவையார் தற்போது திரைப் படங்களில் பாடுவதும், ஆடுவதும், நடிப்பதும் என பிஸியாக இருந்து வருகிறார்.

பூவையர் வாங்கிய கார்:

இந்நிலையில் பூவையருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, பூவையர் தற்போது Tat punch dark edition என்ற காரை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 5.5 லட்சம் முதல் 9.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இந்த சிறுவயதிலேயே பூவையாறு கார் வாங்கியிருப்பதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement