அஜித் ரசிகன் என்பதால் பிரேம்ஜியை விஜய் வேண்டாம்னு சொன்னது உண்மை தான் ஆனால் – வெங்கட் பிரபு போட்டுடைத்த உண்மை.

0
1991
Venkatprabhu
- Advertisement -

தளபதி 68 படத்தில் பிரேம்ஜி நடிக்க கூடாது என்று விஜய் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு.

-விளம்பரம்-

இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா என பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.

- Advertisement -

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், சஞ்சய் மேத்திவ் தாமஸ், மிஸ்கின், அர்ஜுன், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தில் விஜய் உடைய காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து நடிகர் விஜய்யின் தளபதி 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

தளபதி 68-வது படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

தற்போது விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் விஜய் தோற்றத்தை வித்தியாசமாக காண்பிக்க 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவருடைய உடலை ஸ்கேன் செய்து இருக்கின்றனர்.. மேலும் அவர்கள் நினைத்தபடியே விஜயினுடைய தோற்றத்தை உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் குறித்த சர்ச்சை:

இந்த நிலையில் தளபதி 68 படத்தில் நடிகர் பிரேம்ஜி நடிக்க கூடாது என்ற சர்ச்சை தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பேட்டியில் பிரேம்ஜி, தளபதி என்னிடம் நானும் உங்க அண்ணனும் படம் பண்ணும்போது நீ நடிக்க கூடாது என்று சொன்னார். ஏன் அண்ணா என்று கேட்டதுக்கு நீங்க தல ஆளு என்று சொன்னார். நீ வேணும்னா அந்த படத்துக்கு மியூசிக் பண்ணு .ஆனால், நீ நடிக்க கூடாது என்று சொன்னார். அதற்குப் பிறகு கெஞ்சி கூத்தாடி இல்லன்னா ஏற்கனவே உங்க ரசிகர்கள் எல்லாம் என்னை கழுவி கழுவி ஊத்துறாங்க அண்ணா என்று நகைச்சுவையாக பேசி இருந்தார்.

வெங்கட் பிரபு விளக்கம்;

இப்படி இவர் பேசியிருந்ததை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து சர்ச்சையாக்கி இருக்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக வெங்கட் பிரபு, இது மங்காத்தா படத்தின் பின் நடந்த நிகழ்வு. அதுவும் விஜய் காமெடிக்காக சொன்ன ஒரு விஷயம். இதை தேவையில்லாமல் சர்ச்சையாக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. பொதுவாகவே வெங்கட் பிரபு படம் என்றால் பிரேம்ஜி கண்டிப்பாக நடிப்பார். ஆக இந்த படத்தில் பிரேம்ஜி நடிப்பாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement