பெண் செய்தியாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அஜித் பட நடிகர் – குவிந்த எதிர்ப்புகளால் அவர் வெளியிட்ட பதிவு.

0
392
- Advertisement -

பெண் செய்தியாளரிடம் நடிகரும், பாஜக முன்னாள் எம்பியுமான சுரேஷ் கோபி நடந்திருக்கும் மோசமான சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மலையாளத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சுரேஷ் கோபி. இவர் அதிகம் மலையாள மொழி படத்தில் தான் நடித்திருக்கிறார். இருந்தாலும், தமிழில் இவர் தீனா, ஐ போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பின்னணி பாடகர் ஆவார். அதோடு இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற மாநிலங்கள் அவை தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக சுரேஷ் கோபி தேர்வு செய்யப்பட்டிருந்தார். பின் அதே ஆண்டில் இவர் பாஜகவில் இணைந்து விட்டார். தற்போது இவர் பாஜகவில்
தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

சுரேஷ் கோபி செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த நிலையில் சுரேஷ் கோபி பெண் பத்திரிக்கையாளரிடம் நடந்து கொண்ட சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, கேரள கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு சுரேஷ் கோபி பதில் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த பெண் செய்தியாளர் ஒருவர், சுரேஷ் கோபியிடம் கேள்வி கேட்டிருந்தார்.

பெண் செய்தியாளரிடம் சுரேஷ் கோபி செய்தது:

அதற்கு சுரேஷ் கோபி அந்த பெண் செய்தியாளர் தோளின் மீது கை வைத்து பதிலளித்திருக்கிறார். உடனே அவருடைய கையை தள்ளிவிட்டு அந்த பெண் செய்தியாளர் சென்றுவிட்டார். பின் மீண்டும் முன்வந்து அந்த பெண் செய்தியாளர் கேள்வி கேட்டார். மீண்டும் அவர் மீது கை வைத்து சுரேஷ் கோபி பதில் அளித்து இருந்தார். தற்போது இந்த சம்பவம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், பெண் செய்தியாளர் இடம் சுரேஷ் கோபி அத்துமீறி நடந்து கொண்டது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

பெண் செய்தியாளர் பேட்டி:

இதனால் சுரேஷ் கோபி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள். இதுகுறித்து அந்த பெண் செய்தியாளர், என் அனுமதி இல்லாமல் எனது உடலில் கைவைத்ததை மோசமானதாகவே நான் உணர்ந்தேன். உடனே நான் எதிர்ப்பு தெரிவித்தேன். எந்த ஒரு பெண் செய்தியாளருக்கும் இதுபோன்ற மோசமான அனுபவம் ஏற்படக்கூடாது என்று கூறி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கேரள பத்திகையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருந்தது.

மன்னிப்பு கேட்ட சுரேஷ் கோபி:

இதனை அடுத்து சுரேஷ் கோபி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார். பின் இவர் தன்னுடைய facebook பதிவில், பெண் பத்திரிகையாளரிடம் நான் கரிசனையுடன் நடந்து கொண்டேன். இதுநாள் வரை நான் பொது இடங்களிலோ வேறு இடங்களிலோ தகாத முறையில் நடந்து கொண்டதில்லை. இருப்பினும், அந்த சம்பத்தின் போது பத்திரிகையாளர் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறேன். என் செயலால் அவர் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement