இலங்கை பௌத்த மத துறவி குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டிருக்கும் டீவ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இலங்கையில் உள்ள மொத்த சதவீதத்தில் 70% பௌத்த மதத்தை தான் பின்பற்றுகின்றனர். இலங்கையில் அதிகம் பௌத்த மதம் தான் பரவி கிடைக்கிறது. இந்த நிலையில் சிங்கள பௌத்த துறவி ஒருவர் பேசி இருப்போம் வீடியோ வெளியாகி இருக்கிறது.
அதில் அவர், ஒவ்வொரு தமிழனும் துண்டு துண்டாக வெட்டப்படுவான்! அவர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள். தெற்கில் உள்ள தமிழர்கள் அனைவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! சிங்களவர்கள் அவர்களை கொன்று குவிப்பார்கள்! என்று இலங்கை தமிழர்களை அச்சுறுத்தும் விதமாக சிங்கள பௌத்த துறவியான அம்பிட்டியே சுமனரதன பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து தமிழர்கள் பலருமே கொந்தளித்து எமோஷனலாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
மோகன் ஜி பதிவு:
அந்த வகையில் இயக்குனர் மோகன் ஜி, யாரு இவன்.. இவன எல்லாம் கேள்வி கேட்க அங்க ஆள் இல்ல.. narendramodi அரசாங்கம் இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பார்களா? இவனை கைது செய்து இலங்கை வாழ் தமிழருக்கு நம்பிக்கை தருவார்களா? என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
யாரு இவன்.. இவன எல்லாம் கேள்வி கேட்க அங்க ஆள் இல்ல.. @narendramodi அரசாங்கம் இதை எல்லாம் எதிர்த்து கேள்வி கேட்பார்களா.. இவனை கைது செய்து இலங்கை வாழ் தமிழருக்கு நம்பிக்கை தருவார்களா.. https://t.co/rBziIob9hl
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 28, 2023
மோகன் ஜி இயக்கிய படங்கள்:
பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் ஜி இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும், இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ருத்ரதாண்டவம்.
பகாசூரன் படம்:
இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. மேலும், இயக்குனர் மோகன் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டை வைத்து தான் படத்தை இயக்கி இருந்தார். இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து மோகன் அவர்கள் செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். மோகன் ஜியின் முந்தைய திரைப்படம் போல இந்த திரைப்படமும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாகவே எடுக்க முயற்சி செய்து இருந்தார்.
மோகன் இயக்கும் புது படம்:
இந்த படத்தில் சமூக வலைதளத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை, பாலியல் தொழிலில் பெண்கள் எப்படி சிக்குகின்றனர் போன்ற விஷயங்களை பேசி இருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை தொடர்ந்து மோகன் மீண்டும் ரிச்சர்டை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.