Wild Card எண்ட்ரியால் Housefull ஆன பிக் பாஸ் – டபுள் ஏவிக்ஷனை செய்து இரண்டு பேரை வெளியேற்றிய பிக் பாஸ்.

0
487
BiggBoss
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நான்காவது வாரத்தில் வெளியேற இருக்கும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது நான்காவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி சென்று கொண்டு இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மக்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதேபோல் இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. மேலும், முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சி தான். பின் நான்காம் வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

நான்காம் வாரம் எலிமினேஷன்:

இந்த முறை ஓபன் நாமினேஷன் நடந்தது. அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வாரம் 5 wild card போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இந்தவாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல்தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வினுஷா மற்றும் யுகேந்திரன் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.

Wild card 5 என்ட்ரி:

இந்த வாரம் இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாக கமலஹாசன் கூறியிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருப்பது, நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் விளையாட தெரியாதவர்கள், மந்தமாக இருப்பவர்களை வெளியேற்றலாம் என்று பிக் பாஸ் முடிவு செய்து இருக்கிறது. ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா மற்றும் பின்னணி பாடகர் கானா பாலா, அன்ன பாரதி, திருநங்கை நமீதா மாரிமுத்துவின் மகள் பிரவீனா மாயா ஆகியோர் வர இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement