ஒரு வழியாக சூர்யா லுக்கின் போஸ்டரை வெளியிட்ட விக்ரம் படக்குழு – வைட்டிங்லயே வெறி ஏறுதே.

0
305
vikram
- Advertisement -

விக்ரம் படத்தில் நடித்துள்ள சூர்யாவின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-476.jpg

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. மேலும், இந்த படத்தில் சின்னத்திரை பிரபலங்களான ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

சூர்யா குறித்து கமல் சொன்ன தகவல் :

இந்தநிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து கமலஹாசன் கூறியிருந்தது, விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா கடைசி நிமிடத்தில் தோன்றி அந்த கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார். அந்த கதாபாத்திரம் விக்ரம் மூன்றாம் பகுதியான தொடக்கமாக இருக்கும் என்று கூறியிருந்தார். 1986 ஆம் ஆண்டு கமலின் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் இருந்து தான் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

sequel படமா விக்ரம் :

தற்போது கமல் சூர்யாவின் கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கூறியதன் மூலம் வெளியாக இருக்கும் விக்ரம் படம் இரண்டாவது பாகம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால், இது எது முதல் பாகம் என்று படக்குழு விளக்காத வரையில் தெரியப்போவதில்லை. எது இருந்தாலும் சூர்யா நடிக்கும் மூன்றாவது படம் குறித்து அவரது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இரும்புக்கை மாயாவி :

இது ஒருபுரம் இருக்க விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா ஒரு இரும்பு கையுடன் நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சூர்யா நடிப்பில் லோகேஷ் ஏற்கனவே இரும்புக்கை மாயாவி என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். இதற்கான போஸ்டர் கூட வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் அதே கதாபத்ரத்தில் தான் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார் என்றும் இந்த படம் விக்ரம் படம் லோகேஷ்ஷின் Multi Universe படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is 1-475-818x1024.jpg

சூர்யா குறித்து லோகேஷ் கனகராஜ் :

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசி இருக்கும் லோகேஷ் கனகராஜ் ‘முடிஞ்ச அளவு சூர்யா இந்த படத்தில் இருக்கும் விஷயத்தை பொத்தி பொத்தி வைத்து இருந்தோம் ஆனா எப்படியோ வெளியாகிவிட்டது’ என்று கூறியுள்ளார். மேலும், படத்தின் ட்ரைலரில் வரும் அந்த குழந்தை சூர்யா தானா என்று கேட்டதற்கு ‘அது எனக்கே கண்டுபிடிப்பா தான் இருந்துச்சி. சூர்யாவை பற்றி வரும் விஷயங்கள் பாதி உண்மை பாதி பொய். அதை எல்லாம் படம் பிறகு நீங்க பார்ப்பீங்க. அப்புறம் நானே சொல்றேன்’ என்று கூறியுள்ளார்.


Advertisement