ரஜினியின் அண்ணாத்தயை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம். (குறைந்துவிட்டதா ரஜினியின் மவுசு )

0
16495
surya
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தின் டீசரை சூர்யாவின் ஜெய் பீம் படம் டீசர் முந்தி இருப்பதைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இந்த படத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தின் டீஸர் அக்டோபர் 14-ஆம் தேதி யூடியூபில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்து யூடியூப் ட்ரெண்டிங்கிலேயே அண்ணாத்த படத்தின் டீசர் தான் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் படம் டீசர் வெளியாகி உள்ளது. தற்போது சோசியல் மீடியாவில் ஜெய் பீம் படம் அண்ணாத்த படத்தை முந்தி உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நாளைக்கே அண்ணாத்த படத்தின் டீசர் பார்வையாளர்களை ஜெய் பீம் டீசர் கடந்து உள்ளது.

இதையும் பாருங்க : நான் காக்கி சட்ட குடும்பத்தை சேர்ந்தவன் – போலீஸ் ஆவனும்னு ஆச பட்றவங்க இங்க வந்து பாருங்க.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமால் அண்ணாத்த படம் டீஸர் தற்போது 61 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் ஜெய்பீம் படம் டீசர் 65 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளது என்றும் சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் படத்தை விட சூர்யா படம் ட்ரெண்டிங்கில் இருப்பது குறித்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். ஜெய் பீம் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் பழங்குடி மக்களின் உரிமைக்காக போராடும் கதை. மேலும், இந்த படத்தில் சூர்யா அவர்கள் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் தான் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் அண்ணாத்த படம் வழக்கமான மசாலா படம் என்பதால் தான் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. படம் வெளிவந்த பிறகு தான் எந்த படம் பாக்ஸ் ஆபிசில் இடம் பெற்றது என்பது பொறுத்திருந்து பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement