அடேங்கப்பா, இப்படி இருந்த நடிகையை தான் இப்படி அடையாளம் தெரியாமல் மாத்தி வச்சிருக்காங்க – ஷாக்காக்கிய புகைப்படம்.

0
1010
lejimol
- Advertisement -

சூரரை போற்று என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து ‘கூட்டத்தில் ஒருவன்’ என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

-விளம்பரம்-

- Advertisement -

பழங்குடியினர் உரிமைகளைப் பற்றிப் பேசும் பல படங்கள் வந்திருக்கு. அப்படி வெளியான படங்கள் எல்லாமே காடுகளில் வாழும் பழங்குடியினர் பத்தி தான் இருந்தது. ஆனால், முதல் முதலாக சமவெளியில் வாழ்ந்த பழங்குடியினர் பற்றி பேசின படமாக ஜெய் பீம் படம் அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமில்லாமல் போலீஸ் கூட பழங்குடியினர் மக்கள் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் ஜெய் பீம் படத்தில் சொல்லப்பட்ட பழங்குடியினர் கதை அப்படியே உண்மையாக நடந்த கதை தான்.

இதையும் பாருங்க : சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே – ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு ரஞ்சித் போட்ட ட்வீட்.

இந்த படத்தில் ராஜாகண்ணு மற்றும் செங்கேணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் . இதில் மணிகண்டனை பலருக்கும் தெரிந்து இருக்கும். இவர் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக காலா படத்தில் ரஜினியின் இளைய மகனாக நடித்து இருந்தார். ஆனால், இந்த படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் யார் தெரியுமா ?

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-43.jpg

இவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரியாகவும், சித்தார்த்திற்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.இது தவிர லிஜோமோல் ஜோஸ் அவர்கள் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார். ஜெய் பீம் படத்தில் பழங்குடி பெண் தோற்றத்தில் இருக்கும் இவரது மாடர்ன் உடை புகைப்பங்களை கண்டு ரசிகர்கள் பலரும் ஷாக்காகி இருக்கின்றனர்.

Advertisement