-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ச ரி க ம ப நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்து பாதியில் கிளம்புவதாக ஷாக் கொடுத்த சுசீலா அம்மா

0
1884
Suseela

சரிகம நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்து பாதியிலேயே பாடகி சுசீலா அம்மா கிளம்ப இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு விதமான பாடல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகம நிகழ்ச்சியும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான். இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல பாடகர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகளும் கிடைத்து இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்றாவது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சீனிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ராமயா நம்பீசன் ஆகியோர் நடுவர்கள் ஆக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் இந்த நிகழ்ச்சி 23 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று இருந்தார்கள்.

சரிகமப நிகழ்ச்சி :

இதில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அக்ஷயா, ஜீவன் இருவரும் பிரமாதமாக பாடி நேரடியாக பைனலுக்கு சென்று விட்டார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் மத்தியில் கடுமையாக போட்டி நிகழ்ந்து வருகிறது. இதில் யார் யாரெல்லாம் பைனலுக்கு போக இருப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாடகி சுசிலா நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே செல்ல இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிறப்பு விருந்தினராக வந்த சுசீலா:

-விளம்பரம்-

அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் ஒயிட் ரவுண்ட் நடைபெற இருக்கிறது. இந்த ரவுண்டில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ சுசிலாமா பங்கேற்று இருந்தார். இவர்களுடன் கார்த்திக்ராஜ், சூரி, பாடகர் யுகேந்திரன், சாந்தனு, கயல் ஆனந்தி ஆகியோரும் தங்களுடைய ராவணக் கோட்டம் என்ற படத்தின் பிரமோஷனுக்காக பங்கேற்று இருந்தார்கள். பின் போட்டியாளர்கள் பாடல்களை பாடி இருக்கிறார்கள். அப்போது சுசீலா அம்மா ஒவ்வொரு போட்டியாளர்கள் பாடிய பிறகும் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சுசீலா சொன்னது:

அதில் லக்ஷனா பாடுவதை கேட்டபின் நான் இங்கிருந்து கிளம்புகிறேன். இந்த பொண்ணு என்ன மாதிரியே பாடுகிறார் என்று சுசிலா அம்மா பாராட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல் ராக வர்ஷினி பாடிய பாடலை கேட்டு, நான் கூட இப்படி பாடி இருக்க மாட்டேன் என்று பாராட்டுகிறார். இதைக் கேட்டு இருவருமே கண்கலங்கி ஆனந்தத்தில் அழுந்திருக்கிறார்கள். தற்போது இது குறித்த புரோமோ வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாடகி சுசீலா திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக இருந்தவர் சுசிலா. இவர் தென் இந்தியாவின் இசைக்குயில் என்றும் மெல்லிசை அரிசி என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், என பல மொழிகளில் பாடி அசத்திருக்கிறார். இவர் இதுவரை 25 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பலரும் இசை அரசி, கான கோகிலா, கான சரஸ்வதி என்றெல்லாம் அழைக்கிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news