அஜித் ரசிகர்கள் பால் திருடுவாங்க உஷாரா இருங்க,  பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை (காரணம் இது தானா)

0
381
ajith
- Advertisement -

வலிமை படம் ரிலீஸ் ஆவதை ஒட்டி அஜித் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பால் திருடலாம் என தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நலச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த வலிமை படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாக இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், அஜித் இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ, ட்ரைலர் எல்லாம் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். நீண்ட காலமாக காத்திருந்த வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் அம்மா-மகன் தொடர்பான காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

வலிமை படம் பற்றிய தகவல்:

இந்த படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. வலிமை படம் குடும்ப பிரச்சினைகள் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பற்றியதல்ல. ஒரு குடும்பம் சமூகத்திற்குள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியது என்று கூறப்படுகிறது. மேலும், வலிமை படம் ரிலீஸ் ஆவதை தொடர்ந்து அஜித் கட்டவுட்டுகள், போஸ்டர்கள் என ரசிகர்கள் மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் கட்டவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பாலை திருடலாம் என்று தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் நல சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் சங்கத்தின் அறிக்கை:

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, முன்னணி நடிகர்கள் படம் ரிலீசாகும் போது உயிரற்ற கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். முன்னணி நடிகர் ரஜினிகாந்த், அஜீத், விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் தடை செய்யக்கோரி கடிதம் எழுதி இருக்கிறோம்.

-விளம்பரம்-

பால் அபிஷேகம் செய்வதை தடை செய்ய புகார்:

பின் பால் அபிஷேகம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நடிகர்கள் உள்ளிட்டோர் இது குறித்து துளி அளவு கூட முயற்சி எடுத்ததாக தெரியவில்லை. கடந்த காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பால் முகவர்களின் கடைகள் முன்பு இருந்த பாலை ரசிகர்கள் திருடிய சம்பவம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆகவே வியாழக்கிழமை நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் திரையரங்குகள் முன்பு வைக்கப்பட்டிருக்கும் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய அவரது ரசிகர்கள் பால் முகவர்களின் கடையில் பாலை திருடலாம்.

ரசிகர்கள் பால் திருடலாம் எச்சரிக்கை:

இது போன்ற நேரங்களில் பால் முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். காவல் துறையை மட்டும் நம்பிக்கொண்டு குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. நாளை நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை பால் முகவர்கள் சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ள வேண்டும். ரசிகர்கள் என்ற போர்வையில் யாரேனும் பாலை திருட முயற்சி செய்தால் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து சிஎஸ்ஆர் ரசீதை சங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். தற்போது இந்த அறிக்கை சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement