அவனுக்கு பேச வராது, நடிக்க வராது, டான்ஸ் வராது – சொந்த மகன் குறித்தே குறைகளை சொன்ன சிவகுமார்.

0
906
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது அப்பா சிவகுமார் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான பழம்பெரும் நடிகர். சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம் படம். இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படி என்னதான் சூர்யா,பிரபல நடிகர் சிவகுமாரின் மகன் என்றாலும் தன்னுடைய தனித்திறமையால் தான் இன்று தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனக்கென்ற ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சூர்யா அவர்கள் ஏற்கனவே தன் திரைப்பயணம் குறித்து பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், நான் எட்டாவது படிக்கும் போதே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பு எல்லாம் சிவகுமாரின் மகன் என்பதற்காக தான்.

- Advertisement -

திரைப்பயணம் குறித்து சூர்யா கூறியது:

அதனால் அந்தப் படங்களில் நடிக்க எனக்கு அப்போது விருப்பமில்லை. அதன் பின்னர் நான் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்று விட்டேன். இதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள், ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பத்தில் ஒரு 25 ஆயிரம் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது நான் தான் மூத்த மகன் என்ற பொறுப்பில் இருந்ததால் அந்த கடனை அடைக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். அதனால் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது வேலைக்கு தினமும் ஒரு 80 கிலோமீட்டர் பயணம் செய்து வருவேன். இதனால் என்னுடைய முகமெல்லாம் அங்கங்கே கருப்பாக இருக்கும். நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று சொன்னபோது பலரும் கேலி செய்தார்கள்.

சூர்யா குறித்து சிவகுமார் அளித்த பேட்டி:

பின் போராடி நடித்தேன். என்னுடைய முதல் படமான நேருக்கு நேர் படத்தில் எனக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைத்தது என்று பல விஷயங்களை கூறி இருந்தார். இந்த நிலையில் சூர்யாவின் திரைப் பயணத்தை குறித்து நடிகர் சிவகுமார் அவர்கள் விழா ஒன்றில் மனம் திறந்து கூறியிருப்பது, ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஜெய்பீம் படத்தை பார்த்து தமிழக முதல்வர் இருளர்கள் மக்களின் பட்டியல் எடுத்து அவர்களுக்கு ரேஷன் கார்டு, பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் இந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா? என்று எனக்கு தெரியாது. எனக்கும் என் மனைவிக்கும் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இந்த பையன் என்ன பண்ண போகிறான் என்று கவலையில் இருந்தோம்.

-விளம்பரம்-

சூர்யா செய்த முதல் வேலை:

ஒரு நாளைக்கு நாலு வார்த்தை கூட பேசாதவன். சரி நமக்கும் பையன் இருக்கிறான் என்ற எண்ணத்தில் தான் இருந்தோம். பள்ளி படிக்கும் போது ஒரு கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன். பின் பள்ளியை மாற்ற சொன்னார்கள்.எப்படியோ சூர்யா பள்ளிப் படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் கொண்டு போய் சேர்த்தோம். வருடம் கூட கூட அரியர்ஸ் அதிகரித்துக்கொண்டே சென்றது. முட்டி மோதி எப்படியோ சூர்யா படித்து முடித்தான். பின் ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் சூர்யா வேலைக்கு சேர்ந்தான். அம்பத்தூர் எக்ஸ்போர்ட் கம்பெனி 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. தினமும் பைக்கில் சென்று கஷ்டப்பட்டான். பின் காலங்கள் செல்ல செல்ல வசந்த் மூலம் சூர்யா வாழ்க்கையில் வசந்தம் வந்தது.

முதல் பட வாய்ப்பு கிடைத்த அனுபவம்:

ஒரு நாள் விமான நிலையத்தில் என்னுடைய நண்பரை பிக்கப் செய்ய சூர்யா வந்து இருந்தார். அப்போது சூர்யாவை பார்த்து படத்தில் நடிக்க வருவாரா? என்று கேட்டதற்கு சரியா போச்சு அவனுக்கு நடிக்க தெரியாது, நடனம், பாட தெரியாது, நாலு வார்த்தை பேசக்கூட மாட்டான் என்று நான் சொன்னேன். உடனே வசந்த், அப்படிப்பட்ட ஆள் தான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்லி சூர்யாவிற்கு நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சூர்யாவின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். அப்போதுதான் எனக்கு நம்பிக்கை வந்தது. அதற்குப் பிறகு சில படங்கள் தோல்வியுற்றது. பாலாவின் நந்தா படம் மூலம் மீண்டும் சூர்யாவின் திரைப்பயணம் மாறியது. இப்படியெல்லாம் சூர்யாவின் வாழ்க்கையில் நடக்குமா? என்று நானும் என் மனைவியும் எதிர்பார்த்ததில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement