நயன்தாராவின் ‘மாயா’திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் அஸ்வின் சரவணன் அடுத்த படைப்பு ..!அசத்தல் அப்டேட்..!

0
273
Maya

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து “மாயா” என்ற சூப்பர் ஹிட் திரில்லர் படத்தை இயக்கியவர் அஸ்வின் சரவணன். தனது முதல் படத்திலேயே பேசப்பட்டஇவர், தன் அடுத்த படமாக “இறவாக்காலம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் தயாராகி வருகிறது.

இயக்குனர் அஸ்வின் சரவணன்:

இந்த நிலையில், தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக்குடன் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு “கேம் ஓவர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் படத்தில் நயன்தாராவை இயக்கியவர், இந்தப் படத்தில் டாப்ஸியை இயக்கவுள்ளார்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ரோன் எத்தன் படத்துக்கு இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என்று பன்மொழிகளில் இந்த படம் தயாராகவுள்ளது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் இன்று(அக்டோபர் 11)முதல் தொடங்கவுள்ளது. “மாயா” படத்தை போன்றே இந்த படமும் ஒரு திரில்லர் படமாக உருவாக உள்ளது.

கேம் ஓவர் பர்ஸ்ட் லுக்:

Game over first look

இந்த படத்தை குறித்து பேசிய இயக்குனர் அஸ்வின் சரவணன், ஒரு வீட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதை இது. படத்தின் 70 சதவிகித காட்சிகளில் டாப்ஸி வீல் சேரில் வருகிற மாதிரி காட்சிகள் இருக்கும். தமிழ், தெலுங்கு பைலிங்க்குவல் படமாக தயாராகவுள்ளது. டாப்ஸி தற்போது இந்தியில் பிரபலமாக உள்ளதால் இந்தியில் எடுக்க பேசி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.