தென்னிந்திய சினிமா படங்களில் நடிக்காமல் இருந்ததற்கு இதுதான் காரணம் என்று முதன் முதலாக நடிகை தமன்னா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.
அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது.
தமன்னா திரைப்பயணம்:
அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஹிந்தியில் வந்த பவுன்சர் படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார்.
ஜெயிலர் படம்:
பின் சமீபத்தில் தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது. இந்த வெப் தொடரில் தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு ஓவர் கிளாமராக நடித்திருந்தார். தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் தமன்னா ஆடி இருந்த காவாலா பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதோடு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் மூலம் தமன்னா மீண்டும் தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆஸ்தான இடத்தை பிடித்திருக்கிறார்.
தமன்னா அளித்த பேட்டி:
இதனை அடுத்து இவர் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமன்னா பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர் தென்னிந்திய படங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தது குறித்து கூறியிருந்தது, தென்னிந்திய சினிமாவில் சில ஃபார்முலாக்கள் இருக்கிறது. அது எல்லாம் ஈஸியானது தான். சில கமர்சியல் படங்களில் என்னுடைய கதாபாத்திரங்களுடன் என்னால் பொருந்த முடியவில்லை. இயக்குனர்களிடம் அதை குறையுங்கள் என்று கேட்டு இருக்கிறேன்..
தென்னிந்திய சினிமா:
அதோடு சகிக்க முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தைக் கொண்டாடும் படங்களில் நடிக்காமல் இருக்க முயற்சி செய்யத் தொடங்கியதால்தான் தென்னிந்திய சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தேன். அதேபோல் தென்னிந்திய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு பாலிவுட்டில் நான் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்ற ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அதை நான் ஒரு தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு படம் என்பது நிறைய பேரோட பங்களிப்புடன் உருவாகிறது. அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்.