‘அப்பா சாவுக்கு போகும் போது கீ ரோஸ்ட் சாப்பிட்ட நீ எல்லாம் பேசலாமா’ – லியோ பாடலை விமர்சித்து விமர்சனத்திற்கு உள்ளான நடிகை.

0
2994
RJAnandhi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படம் வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதோடு இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் அதே வேலையில் இந்த பாடலில் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைபிடிக்கும் காட்சிகளிலும் விஜய் நடித்திருக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

தற்போது இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் இடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமீப காலமாகவே தமிழக அரசும் காவல்துறையும் போதைப்பொருள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் இந்த பாடல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலை விமர்சித்து பிரபல Rjவும் கோமாளி பட நடிகையுமான ஆனந்தி விமர்சித்து பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இன்னும் எத்தனை நாளைக்கு தான் புகைபிடிப்பது, ஒல்லியான இடுப்பை காண்பிப்பது எல்லாம் மாஸ் / அழகான ஷாட் என்று சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். படைப்பாற்றல் குறைந்துவிட்டதா ? இல்லை பொறுப்புகள் குறைந்துவிட்டதா ? இளைஞர்கள் ஒரு நல்ல ரோல் மாடலை பெற நேரம் வந்துவிட்டது’ என்று விமர்சித்து இருந்தார். ஆனந்தியின் இந்த பதிவை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இவரது யூடுயூப் பக்கத்தில் இவர் பேசிய பல சர்ச்சையான விஷயங்களை நோண்டி எடுத்து கலாய்த்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர் ஒரு பேட்டியில் தந்தையின் இறப்பிற்கு செல்லும் வழியில் நெய் தோசை சாப்பிட்டேன் என்று சொன்னது பேசும் கேலிக்கு உள்ளானது. தற்போது அந்த விஷயத்தை எல்லாம் நொண்டி இவரை கலாய்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நான் ரெடி பாடலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் குவிந்து வருவதால் இந்த பாடலின் வீடியோவில் ‘புகைப்பிடிக்கும் காட்சிகள் வரும் இடங்களில் ‘புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும். உயிரைக் கொல்லும்’ என்ற வாசகம் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

Advertisement