0
968
ipl-auction
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11 ஆம் சீசன் சிலமாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி 3 வது முறையாக கோப்பையை கைப்பற்றியது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபில் தொடரின் ஏலம் சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது.

-விளம்பரம்-

இந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பத்தால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க : வருண் பற்றிய மேலும் சில சுவாரசிய தகவல்கள்

- Advertisement -

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி என்பவரை பஞ்சாப் கிங்ஸ் IX அணி ரூ. 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. தற்போது இவர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரை சேர்ந்த இவர் சிறுவயது முதலே கிரிக்கெட் மீது ஆர்வமுள்ளவர்.

க்ளப் கிரிக்கெட்டில் ஆடிவந்த இவர், சென்ற ஐபில் இல் சென்னை அணியின் நெட் பௌளராக இருந்து வந்தார். மேலும், தினேஷ் கார்த்திக் வாயிலாக கொல்கத்தா அணி நெட் பௌலர் வாய்ப்பு கிடைத்தது.  கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த போதே ஒரு சில திரைபடங்களிலும் தலை காண்பித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ஜீவா’ படத்தில் ஒரு சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும், இவர் ஒரு தீவிர விஜய் ரசிகரும் ஆவர்.

-விளம்பரம்-
Advertisement