சம்யுக்தாவுடன் பொய்யான நரக வாழ்க்கை : வருந்திய விஷ்ணுகாந்திற்கு ரசிகைகளின் ஆதரவு.

0
1675
- Advertisement -

சம்யுக்தா குறித்து விஷ்ணுகாந்த் பதிவிட்ட பதிவிற்கு ரசிகைகள் ஆதரவு தெரிவித்து வரும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வாரங்களாகவே சின்னத்திரை வட்டாரத்தில் சம்யுக்தா- விஷ்ணுகாந்த் சர்ச்சை தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மூன்றாம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-
vishnukanth

மேலும், இவர்களுடைய திருமண வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா இருவரும் பிரிந்து விட்ட தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருமணம் ஆன 15 நாட்களிலேயே இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு விட்டது. திருமணத்திற்கு பின்னர் சம்யுக்தா தன் நண்பர்களுடன் பேசி வந்ததால் தான் இருவருக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டது என்று விஷ்ணுகாந்த் பேட்டி அளித்து இருந்தார்.

- Advertisement -

விஷ்ணுகாந்த் – சம்யுக்தா சர்ச்சை:

அதில் அவர் சம்யுக்தா குறித்து பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ஆனால், விஷ்ணு சொல்வது எல்லாம் பொய் என்று சம்யுக்தா கூறி இருந்தார். அதோடு அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் தான் முக்கியம் என்றும் கூறி இருந்தார். இதனால் சம்யுக்தாவிற்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷ்ணுகாந்தை காதலிப்பதற்கு முன்பாகவே நடிகை சம்யுக்தா, ரவி என்பவரை காதலித்து இருக்கிறார்.

சம்யுக்தா மீதான குற்றச்சாட்டு:

ரவி வேறு யாரும் கிடையாது சம்யுக்தாவுடன் ஏற்கனவே நிறைமாத நிலவே என்ற தொடரில் நடித்தவர் தான். உண்மையாகவே இவர்கள் இருவரும் காதலித்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சம்யுக்தாவிடம் ரவி எல்லை மீறி இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள். இதை சம்யுக்தா பொதுவான நபரிடம் கூறி இருக்கிறார். இதை விஷ்ணுகாந்த் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இன்னொரு பக்கம், ரவி இது குறித்து பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதற்கு பலரும் ரவிக்கு ஆதரவாக கமெண்ட் போட்டு இருக்கின்றன.

-விளம்பரம்-

சம்யுக்தா கொடுத்த பதில்:

மேலும், ரவி விவகாரம் தொடர்பாக சம்யுக்தா எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நபராக சம்யுக்தா இருக்கிறார். அதோடு ஆண் வர்கமே இப்படித்தான் என்றும் கூறி வருகிறார். இந்த நிலையில் விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், சம்யுக்தா உடனான திருமண வாழ்க்கை பொய்யானது.

விஷ்ணுகாந்த் பதிவு:

அது ஒரு நரக வாழ்க்கை. அதிலிருந்து என்னை இயற்கையும், இறைவனும் மீட்டு விட்டது. இந்த கடினமான தருணத்தில் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியிருக்கிறார். இப்படி விஷ்ணுகாந்த் பதிவிட்ட பதிவிற்கு பலரும் ஆதரவாக கமெண்ட் போடுவது மட்டும் இல்லாமல் பெண் ரசிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement