சொப்பன சுந்தரி முதல் தங்க புஸ்பம் வரை – படத்தில் ஒரு காட்சியில் கூட வராமலேயே பிரபலமான பெயர்கள்.

0
816
tamilmovies
- Advertisement -

தமிழ் சினிமாவுலகில் முகத்தை காட்டாமல் பெயர், குரலை மட்டும் கொடுத்து ஃபேமஸான பல நடிகர்கள் இருக்கிறார்கள். வடக்குப்பட்டி ராமசாமி முதல் தங்கபுஷ்பம் வரை என பல பேர் முகம் தெரியாமல் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான். அந்த பட்டியலைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

கரகாட்டக்காரன்:

இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த படம் கரகாட்டக்காரன். இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தில் ஒரு காட்சியில் கார் தள்ளிக் கொண்டு வரும்போது செந்தில், கவுண்டமணி சொப்பன சுந்தரி பற்றி கேட்டிருப்பார். உடனே கவுண்டமணி செந்திலை அடிப்பார், சொப்பன சுந்தரி யார் வச்சிருக்கா? என்று அந்த காமெடி மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த படத்தில் மட்டும் இல்லாமல் சென்னை- 28 2 என்ற படத்தில் சொப்பன சுந்தரி பாடல் வந்து இருந்தது. வீர சிவாஜி படத்தில் சொப்பன சுந்தரி நான் தானே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். ஆனால், அந்த சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரமே கிடையாது. இருந்தாலும் இந்த சொப்பன சுந்தரி என்ற கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிக வைரஸ் ஆனது.

- Advertisement -

கிரி:

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கிரி. இந்த படத்தில் அர்ஜூன், ரீமாசென், ரம்யா, வடிவேலு, தேவயானி, பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படமும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் வடிவேலு வீரபாகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அப்போது என்னுடைய அக்காவை கணபதி ஐயர் வைத்து கொண்டு தான் இந்த பேக்கரியை வாங்கினேன் என்று சொல்வார். இது மறுநாள் காலையில் எல்லோருக்குமே தெரிந்து விடும். ஆனால், கடைசிவரை வீரபாகு அக்காவும், கணபதி ஐயர் முகம் தெரியாது.

சந்திரமுகி:

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் சந்திரமுகி. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் திகில் திரைப்படமாக வெளியாகி இருந்தது. படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், இந்த படத்தில் வடிவேலுவும் ரஜினியும் அரண்மனை வீட்டிற்கு செல்வார்கள். பெயிண்ட் கோபாலு இந்த வீட்டில் ஒரு மாதமாக தங்கி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வடிவேலு சொல்வார். கோபால் என்ற டயலாக் மூலம் அந்த காட்சியை மிக அருமையாக வடிவேலு நடித்து இருப்பார்.

-விளம்பரம்-

வேலையில்லா பட்டதாரி:

இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி இருந்தது. மேலும், முதல் பாகத்தில் காமெடி காட்சியில் விவேக்கின் மனைவியாக தங்கபுஷ்பம் என்ற கதாபாத்திரத்தை கொண்டு வந்திருப்பார்கள். அதன் மூலம் அந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனால் இரண்டாம் பாகம் வரையுமே தங்கபுஷ்பம் கதாபாத்திரத்தை கொண்டு வந்து இருப்பார்கள். ஆனால், கடைசி வரை தங்க புஷ்பம் யார் என்று சொல்லி இருக்க மாட்டார்கள்.

சத்ரபதி:

சிறீ மகேஷ் இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சத்ரபதி. இந்த படத்தில் சரத்குமார், நிகிதா, வடிவேலு, ரம்பா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு கடுப்பாக இருந்தபோது எஸ்டிடி பூத்தில் சென்று ஏதோ ஒரு நம்பருக்கு போன் செய்து டேய் ரங்கசாமி இல்லையாடா என்று பயங்கரமாக பேசியிருப்பார். இந்த படம் பற்றி பெரிதாக தெரியவில்லை என்றாலும் இந்த படத்தின் காமெடி பேமஸ் ஆனது.

மருதமலை:

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த படம் மருதமலை. இந்த படத்தில் அர்ஜுன், வடிவேலு, மீரா சோப்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் வடிவேலு போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அப்போது ரவுடி அவரை பார்த்து என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று சொல்வார். உடனே வடிவேலு ரவுடிகளின் பெயர்களை பட்டியலிட்டு என்னை அடித்து தான் பல ரவுடிகள் பிரபலமானவர்கள் என்று சொல்லி கத்திகுத்து கந்தன் என்ற பெயரை சொல்லி இருப்பார். அந்த கதாபாத்திரம் இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், ஸ்வாதி ரெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு காட்சியில் நந்திதா தன்னுடன் வேலை செய்பவருடன் வண்டியில் செல்வார். அப்போது ஜன்னலிலிருந்து ஒரு கையை மட்டும் வெளியே நீட்டி தம்பி போயிடு என்ற குரல் வரும். அந்த முகத்தை காட்டமாட்டர்கள். அந்தப் பெண்ணின் குரலை வைத்து சோசியல் மீடியாவில் பல மீம்ஸ்களைப் போட்டு இருந்தார்கள்.

ஜில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலு குருவம்மா கதாபாத்திரத்தைப் பற்றி பேசி இருப்பார், உத்தம ராசா படத்தில் வடக்குப்பட்டி ராமசாமி இப்படி பல படங்களில் முகம் தெரியாத கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. இதே போல படத்தில் வரவில்லை என்றாலும் பிரபலமான பெயரகள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் அதை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement