மன உளைச்சலில் இறந்த கணவர், கண்டுகொள்ளாத மகள்கள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் தமிழ் நடிகை.

0
552
vijaykumari
- Advertisement -

இரண்டு சிறுநீரங்களும் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் பழம்பெரும் நடிகை ஜெய்குமாரி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜெய்குமாரி. இவர் அந்த காலத்திலேயே கவர்ச்சி உடைகள் அணிந்து ரசிகர்களை ஈர்த்தவர். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில் தான் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவந்த நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் போன்ற பல தமிழ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நீச்சல் உடை அணிந்த நடிகை என்ற பெயரை பெற்றவர். இவருடைய சொந்த ஊர் பெங்களூர்.

- Advertisement -

ஜெய்க்குமாரி குடும்பம்:

ஆனால், இவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். இவர் அப்பா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆறு வயது சிறுமியாக இருந்த போதே ஜெய்குமாரி சினிமாவிற்குள் நடிக்க வந்து விட்டார். இவருடைய முதல் படம் மக்கள் ராஜ்யாக் என்ற கன்னட மொழி தான். அதன் பிறகு இவர் எம்.ஜி.ஆர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் . அப்போது இவருக்கு வெறும் 14 வயது தான். அதற்கு பிறகு இவர் நிறைய தமிழ் படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும்,இவரின் நடிப்பை விட கவர்ச்சி நடனத்துக்கு தான் அதிக சம்பளமும், மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்திருந்தது.

ஜெய்க்குமாரி குடும்பம்:

இவர் சம்பாதித்து தான் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். பின் இவரின் 25 வயதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாஜிதா, பானு என்ற இரண்டு மகள்களும், ரோஷன் என்ற மகனும் இருக்கிறார்கள். பின் இவருடைய கணவர் சொந்த படம் எடுக்கும் முயற்சியில் நஷ்டம் அடைந்து மன உளைச்சலில் இறந்து விட்டார். அதன் பிறகு தான் இவரின் வாழ்க்கையில் சோதனை காலம் ஆரம்பமானது. இவரின் கணவருக்கு சொந்தமான வீட்டை விற்று கடன்காரர்களுக்கு கொடுத்து விட்டார்.

-விளம்பரம்-

ஜெய்க்குமாரி தற்போதைய நிலை:

ஜெய்குமாரி வைத்த மூன்று கார்களையும் விற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு வந்து விட்டார். பின் இவரின் இரண்டு மகள்களும் இவரை கவனிப்பதில்லை, எந்த உதவியும் செய்வதில்லை. தன்னுடைய மகனுடன் வேளச்சேரியில் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிப்பதாக கண்ணீர் மல்க ஜெய்குமாரி சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி அளித்திருந்தார். தற்போது இவருக்கு 70 வயது ஆகிறது. இவர் தன்னுடைய மகனுடன் வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிவரும் ஜெய்க்குமாரி:

இந்நிலையில் நடிகை ஜெய்க்குமாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிவரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது. தற்போது இவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இதை பார்த்து நடிகர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரை உலக பிரபலங்கள் முன்வந்து அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளனர். சினிமா உலகம் இவருக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement