ரஜினி, கமல் முதல் நயன், சமந்தா வரை – நடிகர், நடிகைகளின் உதவியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

0
555
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் உதவியாளர்களின் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமா துறையில் நடிகர், நடிகைகள் பலரும் தங்களுக்கு என்று தனி உதவியாளர்களை வைத்திருக்கிறார்கள். படக்குழுவில் இருந்து ஏற்பாடு செய்தாலும் இவர்கள் தனியாகவே ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக்கப் மேன், டச் ஆஃப் பாய் என்று பல உதவியாளர்களை வைத்திருக்கிறார்கள். இதனால் இவர்களுக்கு என்று கொடுக்கப்படும் சம்பளமும்
அதிகமாக இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு சூழ்நிலையில் தான் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை புதிய விதியை அறிவித்திருக்கிறது. அதில், நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் உதவியாளர்களுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களே தான் கொடுக்க வேண்டும் என்று அதிரடி முடிவை எடுத்திருக்கின்றன. இந்த கோரிக்கையை ஒரு மாதத்திற்கு முன்பு வைத்திருக்கின்றனர். இதனால் ஒரு மாதமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

தெலுங்கு திரைத்துறையினர் போட்ட விதிமுறை:

இதற்கு தெலுங்கு திரைத்துறையினர் என்ன முடிவெடுக்க போகிறார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இதே முறையை தான் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை எழுந்து இருந்தது. ஆனால், அது நடைமுறைக்கு வரவில்லை. தமிழில் நடிகர், நடிகைகள் படக் குழுவினர் கொடுக்கும் உதவியாளர்கள் இருந்தாலும் தங்களுக்கு என்று தனியாக ஹேர் ஸ்டைலிஸ்ட், மேக் அப் மேன், டச் ஆஃப் பாய் அசிஸ்டன்ட் என 8 முதல் 10 பேர் வந்த கொண்ட குழுவை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சில நடிகர் நடிகைகள் மும்பையில் இருந்து இந்த குழுவை வரவைக்கிறார்கள்.

நடிகைகள் உதவியாளர்கள் வாங்கும் சம்பளம்:

இதனால் இவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகி இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகர் நடிகைகளுக்கு என்று ஒரு தனி பாதுகாவலர்கள் கூட வைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போதைய நிலவரப்படி ஒரு நாளைக்கு நடிகர் நடிகைகள் தங்களுடைய உதவியாளர்களுக்கு ஒரு நாள் கொடுக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ரம்யா கிருஷ்ணன்- உதவியாளர்களுக்கு 80,000

-விளம்பரம்-

நயன்தாரா – உதவியாளர்களுக்கு 65 ஆயிரம்

சமந்தா மற்றும் ராசி கண்ணா- உதவியாளர்களுக்கு 60 ஆயிரம்

கீர்த்தி சுரேஷ்- உதவியாளர்களுக்கு 55 ஆயிரம்

திரிஷா – உதவியாளர்களுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை

ஆனால் இதில் நடிகை நித்யாமேனன் மட்டும் வேறுபட்டு இருக்கிறார். இவர் தன்னுடைய உதவியாளர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கேட்கப்படவில்லை என்று திரை துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நடிகர்களின் உதவியாளர்கள் சம்பளம்:

அதேபோல், ரஜினிகாந்த் – உதவியாளர்களுக்கு 75 ஆயிரம்

விஜய் – உதவியாளர்களுக்கு 50 ஆயிரம்

தனுஷ்- உதவியாளர்களுக்கு 50 ஆயிரம்

சிம்பு – 10 தல படத்திற்கு மட்டும் 21 உதவியாளர்களை அழைத்து வந்திருந்தார் என்றும், அவர்களுக்கு ஒரு நாளைக்கு 80 ஆயிரம் ரூபாய் கொடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் சமுத்திரக்கனி – உதவியாளர்களுக்கு 35 ஆயிரம்

அதர்வா – உதவியாளர்களுக்கு 27 ஆயிரம்

சூர்யா, கார்த்தி, விக்ரம், சிவகார்த்திகேயன்- உதவியாளர்களுக்கு 15000 மட்டுமே வாங்குகின்றனர்.

அஜித் – வலிமை படத்துடன் உதவியாளர்களை வைப்பது நிறுத்திவிட்டார். வலிமை படத்திற்கு முன் அவர் வைத்திருந்த உதவியாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கேட்டிருக்கிறார். ஆனால், தற்போது நடித்து வரும் ஏகே 61 படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் நியமித்த உதவியாளர்களை அஜித் பயன்படுத்துகிறார். இது பாராட்டுக்குரிய ஒன்று.

தயாரிப்பாளர்கள் வேதனை:

அது மட்டும் இல்லாமல் மும்பையில் இருந்து வரவைக்கும் உதவியாளர்களுக்கு என்று நட்சத்திர விடுதியில் தங்கும் செலவு, கார் வாடகை உள்ளிட்ட பல கூடுதல் செலவும் ஏற்படுகிறது. இப்படி நடிகர் நடிகைகள் வைக்கும் உதவியாளர்கள் சம்பளம் தவிர காஸ்டியூம் டிசைனர்களையும் அவர்களே நியமிக்கின்றனர். இதனால் ஒரு படத்திற்கு 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. உதவியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் ஒரு படத்திற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை கூடுதல் செலவாகி இருக்கிறது என்று வேதனையில் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, தெலுங்கு துறையினர் போட்டிருக்கும் விதிமுறை நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்கும். இது தமிழிலும் வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement