ஒரே பாடலில் ஒட்டு மொத்த நடிகர்களை கலாய்த்த சிவா..! சும்மா வெச்சு செஞ்சு இருக்காங்க!

0
1169
Tamil-padam
- Advertisement -

தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலைத்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே ரஜினி முதல் டிரம்ப் வரை டீசரில் வெச்சு செய்த இவர்கள் தற்போது ஒரு பாடலை வேறு வெளியிட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருந்தனர். இந்த டீசர் மூலம் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான ஆர்வம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது. ‘ நான் யாருமில்ல’ என்ற இந்த பாடலில் இவர்கள் செய்திருக்கும் அட்டகாசம் ஏராளம்.

இந்த பாடலில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என்று ஒருவரையும் விட்டுவைகாமல் களா ய்த்துள்னர். அதில் ரஜினி நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவேன் என்று கூறியது, கமலின் பிக் பாஸ் வசனமான ஓடவும் முடியாது ஒலியவும் முடியாது என்ற வசனத்தை கலாய்த்தது என்று அடுகடுக்காக இவர்கள் செய்துள்ள சேட்டைகள் அந்த பாடலில் தெரிகிறது. அந்த பாடலை நீங்களே கேட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கமென்டில் கூறுங்கள். கண்டிப்பாக சிரிச்சி சிரிச்சி எங்களால முடியலடா சாமி!

Advertisement