துப்பாக்கி..மெர்சல்..மங்காத்தா..விக்ரம் வேதா..துப்பறிவாளன்..ஒரே டீஸரில் கலாய்த்த சிவா- தமிழ்படம் 2 டீஸர்

0
1168
tnail-padam-2
- Advertisement -

தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

- Advertisement -

தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலைத்திருப்பார் நடிகர் சிவா. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை உதயநிதியின் ஒய் நாட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசரில் இந்த படத்தின் தலைப்பில் “தமிழ் படம் 2 போலீஸ் அத்யாயம்” என்று இருக்கிறது. இந்த படத்தில் தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக நடித்துள்ள பல ஹீரோக்களின் கதாபாத்திரங்களை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

-விளம்பரம்-

அதில் அஜிந்த நடித்த மங்காத்தா, விவேகம் ,விஜய் நடித்த மெர்சல், துப்பாக்கி மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா என்று பல படங்களை கலாய்ப்பது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் தமிழ் படத்தின் பாகம் ஒன்றை போன்றெய் இந்த படத்திலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.

Advertisement