‘நிகழ்ச்சியின் பெயரோ ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ ஆனா அதிலும் தமிழ் கொஞ்சம் பிழையா போச்சு – கேலிக்கு உள்ளான விஜய் டிவி நிகழ்ச்சி

0
2743
- Advertisement -

தற்போது உள்ள யூடுயூப் கலாச்சார காலகட்டத்தில் தமிழுக்காக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மிகவும் சொற்பமே. விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி நாம் அறியாத பல்வேறு தமிழ் சொற்களை அறியும் வகையிலும் மாணவர்கள் மத்தியில் தமிழ் பற்றிய ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியை சமீப ஆண்டுகளாக ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டது விஜய் தொலைக்காட்சி.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியை போலவே விஜய் தொலைக்காட்சியில் தமிழ் மொழிக்காக ஒளிபரப்ப்பட்ட நிகழ்ச்சி தான் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி. இது முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியுடைய முக்கிய நோக்கம். அதோடு 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

- Advertisement -

அதற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்மஸ்ரீ கமல்ஹாசன், தொல் திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், வைகோ, ஜெயமோகன் – எழுத்தாளர், நாஞ்சில் சம்பத், ஏ.முத்துலிங்கம், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பாராட்டையும் ஒப்புதலையும் பெற்றுள்ளது. 

தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ் கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். பின்னர் இடையில் இந்த நிகழ்ச்சியை அப்படியே விட்டுவிட்டனர். இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடர்ந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை கண்ணன் மற்றும் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் மற்றும் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர் ஈரோடு மகேஷும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பல விதமான சுற்றுக்குள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு போட்டியாளர்கள் ‘வலைதள போராளிகளின் ஆவேசம் சமூக அக்கறையே அல்லது வீன் விளம்பர தேடலே’ என்ற தலைப்பில் பேசி இருந்தனர். ஆனால், இது ஒளிபரப்பப்பட்ட போது அக்கறை என்ற வார்த்தைக்கு பதில் அக்கரை என்று போட்டு இருந்தனர். இதனை நெட்டிசன்கள் பலர் சுட்டிக்காட்டி ‘நிகழ்ச்சியின் பெயரோ ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ஆனா அதிலும் தமிழ் கொஞ்சம் பிழையா போச்சு என்று’ என்று விமர்சித்து வருகின்றனர்.

Advertisement