மீண்டும் வருகிறது சூப்பர் நிகழ்ச்சி – விஜய் டிவி ப்ரோமோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

0
599
Mkstalin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற புது நிகழ்ச்சிக்கான ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை விளங்குகிறது. அதிலும், கொரோனா தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சீரியல், நிகழ்ச்சிகள் என்று புது புது கான்செப்டில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் மக்களும் சின்னத்திரையை விரும்பி பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக போட்டி போட்டுக் கொண்டு புதுப்புது வித்தியாசமான கதைகளத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் என்றாலே நகைச்சுவைக்கும், நிகழ்ச்சிக்கும் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். மேலும், விஜய் தொலைக்காட்சி என்று சொன்னவுடன் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நிகழ்ச்சி தான்.

- Advertisement -

அந்த அளவிற்கு வித விதமாக, புது பொலிவுடன் கலாட்டாவுடன் நிகழ்ச்சிகள் இருக்கிறது. மேலும், பிக் பாஸ், குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை, ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் ஏராளமான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி:

அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இது முழுக்க முழுக்க தமிழ் மொழி பேசும் போட்டி நிகழ்ச்சியாகும். தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியுடைய முக்கிய நோக்கம். அதோடு 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் தமிழ் கடல் நெல்லை கண்ணன், கவிஞர் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், உயிர் திரியில் தமிழ் சுடரை ஏற்றி வைப்போம். எந்நாளும் தமிழோடு நாம் ஒளிர்வோம்.

நிகழ்ச்சி ப்ரோமோ:

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று சொல்வோம். தமிழ் பேசி தமிழ் பேசி பெருமைக் கொள்வோம். தமிழ் போல் மொழியில்லை, தமிழின்றி நாமில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் புரோமோ வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை பார்த்த பலரும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தாலும் சிலர், முதல்வரையும் விட்டு வைக்கவில்லையாடா! உங்களுடைய நிகழ்ச்சி ப்ரோமோவுக்கு அவரையும் இழுத்து விட்டீர்களா என்றெல்லாம் விமர்சித்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement