இதுவே கருபழனியப்பான் நீயா நானால இருந்து இருந்தா இதான் நடந்து இருக்கும் – Troll செய்யும் நெட்டிசன்கள். காரணம் இதுதான்.

0
966
karupazhani
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக இருந்தவர் கரு.பழனியப்பன். இவர் காரைக்குடியைச் சேர்ந்தவர். இவருக்கு சிறுவயதிலேயே தமிழ் மீதும், தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் இவர் பல பட்டிமன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். பின் 1994 ஆம் ஆண்டில் சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் பார்த்திபன் உடன் புள்ள குட்டிக்காரன், மற்றும் ஹவுஸ் புல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதற்கு பின் இரண்டு வேறு இயக்குனர்களிடம் என்னை இயக்குனராக பணிபுரிந்தார். பின் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எழிலிடமும் பழனியப்பன் பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவர் நடிகராகவும் இயக்குனராகவும் ஆனார். பார்த்திபன் கனவு என்ற படத்தின் மூலம் இவர் முதன் முதலாக இயக்குனரானார். அதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் சமூக வலைதளத்தில் திடீர் என்று trollகளை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. குக் வித் கோமாளி, நீயா நானா, பிக் பாஸ் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஹிட் அடித்திருக்கிறது. இதை பார்த்து மற்ற சேனல்களும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை காப்பி அடித்து இருந்தது. சன் டிவி கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து மாஸ்டர் செப் என்ற நிகழ்ச்சியை தொடங்கியது.

அந்த வகையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை தழுவி ஜீ தமிழ் தொலைக்காட்சி தமிழா தமிழா என்று ஒளிபரப்பி வருகிறது இதில் நடிகரும் இயக்குனருமான கரு பழனியப்பன் தான் தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி ஒரு நிலையில் கரு பழனியப்பன் சமூக வலைதளத்தில் கேலிகளுக்கு உள்ளாகி இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் ஒளிபரப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்

கடந்த இரண்டு வாரங்களாக ஒளிபரப்பப்பட்ட நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது கடந்த வாரம் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வீட்டின் முதலாளிகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது இதில் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் அவர்களுக்கு ஆதரவாக பேசிய கோபிநாத்தின் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் மற்றும் அவரது கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

படிக்காத தந்தையின் ஏக்கம் :

இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் ‘நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன்ஆனால என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்’ என்று வெகுளியாக கூறி இருந்தார். தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார்.

தமிழா தமிழா vs நீயா நானா :

அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோபிநாத் பேசிய ‘ஆனந்தமாக வாழ அறிவாக இருக்க அவசியம் இல்லை’ போன்ற வசனங்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்தது. அதே போல ஒரு தந்தையின் ஏக்கத்தை புரிந்துகொண்ட கோபிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கருபழனியப்பனை பலர் கேலி செய்து வருகின்றனர்.

கேலி உள்ளான கருபழனியப்பன் :

கருப்பு பழனியப்பனின் தமிழா தமிழா நிகழ்ச்சி கேலிக்கு உள்ளாகி இருக்கும் மற்றொரு முக்கிய காரணமே நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் பெரும்பாலும் யாரையும் உரிமையில் பேசுவது கிடையாது. அதேபோல விவாதங்களில் பெரும்பாலும் மக்கள் நினைக்கும் கருத்துக்களையே கோபிநாத் முன்வைத்து வருகிறார். ஆனால், தமிழா தமிழா நிகழ்ச்சியில் கரு பழனியப்பன் பலரை உரிமையில் பேசியிருக்கிறார். மேலும், பெண்கள் ஏதாவது எதிர்கருத்து சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளும் இவர் ஆண்கள் ஏதாவது எதிரான கருத்துக்களை கூறினால் அவர்களை ஒருமையில் பேசியதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் கூறியிருக்கிறார்கள்.

Advertisement